உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் -17

பாழேயாவது திண்ணம். உயிரானது தன்கண் உள்ள அறியாமை முற்றுந் தொலையப் பெற்றுப் பேரறிவு விளக்கம் உடைய தானவுடனே பிறவி எடுத்தலும் நின்று போகும். உயிர்கட்கு உடம்புகள் அடுத்தடுத்து வருவதெல்லாம் அவ்வுயிர்களைக் கவிந்து நின்ற அறியாமையை நீக்கி அறிவை எழுப்புதற் பொருட்டாகவேயாகலான், அறியாமை தேய்ந்து அறிவு எழும் வரையில் அவை பிறவிகளிற் சுற்றிச் சுற்றி வரும். ஆகவே, அறிவு நூல்களைக் கற்று அறியாமையை நீக்காதவன் மேன்மேற் பிறவியெடுப்பவனாய் இருத்தலின், அவன் தனக்கு உடம்புகளைப் படைத்துக் கொடுப்பதான ஓயாத வேலையைக் கடவுளுக்குத் தருபவன் ஆவன். இது குறித்தன்றோ பட்டினத்தடிகளும்.

“மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன், வேதாவுங் கைசலித்து விட்டானே-நாதா,

இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னைக் கருப்பையூர் வாராமைக் கா

என்று அருளிச் செய்தனர்.

و,

மேலும், உயிர்க்கு உறுதி தரும் அறிவுநூற் கல்வியைக் கல்லாது, உடம்பைப் பாதுகாத்தற்கு மட்டும் பயன்படும் உலகநூற் கல்வியைப் பயில்வது வெறுங் கூவுதலாகவே முடியும். னென்றால், நிலையாயுள்ள உயிரின் நன்மையை நாடாது, நிலையின்றிச் சில நாளிலோ சில திங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ மறைந்து போகும் உடம்புக்கு உணவு தேடிக் கொடுத்தற்கு மட்டும் பயன்படுகின்ற உலகநூற் கல்வியை வாய் ஓயாது கூவிக் கற்றல் நிலையான பயனைத் தராமையின் அது வெற்றொலியேயாய்ப் போவதன்றி வேறு அது தரும் பேறு என்னை? இவ்வுண்மையை உணர்த்துதற்கன்றே,

"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா துலகநூல் ஓதுவ தெல்லாங் - கலகல கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம் போஒந் துணையறிவார் இல்"

என்று நாலடியார் கூறுவதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/149&oldid=1584368" இலிருந்து மீள்விக்கப்பட்டது