உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

125

னி, அறிவுநூற் கல்வியைப் பெற்றவர் மறுமையில் இன்பத்தை அடைவரென்று பலருங் கூறக் காண்கின்றோமே யல்லாமல் அவர் இம்மையில் மற்றவர்க்கில்லாத சிறப்பினைப் பெறக் காண்கிறோம் இல்லையே; எல்லாரும் உண்டு உடுத்து உறங்கிச் சாதல் போலவே அவரும் உண்டுத் துறங்கிச் சாகின்றனர்; இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்க்குங்கால் உலகநூற் கல்வியில் மிக்கவர்களே இம்மையில் எல்லாச் சீருஞ் சிறப்பும் இன்பமும் பெறுகின்றனர்; கட்புலனுக்கும் நமது நினைவுக்கும் எட்டாத மறுமையில் இன்பத்தை அடைய லாமென நினைத்து அறிவுநூற் கல்வியிற் காலத்தைக் கழிப்பவர் கடைசியில் ஏமாறி இறப்பதற்கே இடமாகின்றதென்று அதனை இழித்துக் கூறுவாரே பலர்.

என்றாலும், அறிவின் ஏற்றத் தாழ்வுகளைச் செவ்வையாக ஆராய்ந்து பார்த்தால், அறிவுநூற் கல்வியில் வருஞ் சிறப்பும் இன்பமும் வேறெதனாலும் வரமாட்டா என்பது நன்கு புலப்படும். எங்ஙனமென்றால், உலகத்தின்கண் எத்தகைய அரும்பெருந் தொழில்கள் நடைபெறுதற்கும் அறிவும், அறிவு முயற்சியுங் கட்டாயமாய் வேண்டியிருக்கின்றன. அறிவில்லாமல் எந்தத் தொழிலையுஞ் செய்தல் முடியாது; எந்த நலத்தையும் அடைதல் இயலாது. அறிவில்லாதவர்களும் அறிவுடையாரைக் கண்டால் அவர்க்குச் சிறப்புச் பணிகின்றனர்;

விரும்புகின்றனர்.

செய்து

அவரை

ஒருவர் பலருதவி கொண்டு ஓர் அரிய பெரிய முயற்சியை நடைபெறுவிக்குங்கால், அம்முயற்சி அறிவில்லாதவர் செய்கை யால் முட்டுப்படுதல் கண்டு எவ்வளவு வருந்தி அவரை வெறுக்கின்றனர்! அப்போது அறிவுடையான் ஒருவன் மற்றையோர் செய்த பிழைகளையெல்லாந் திருத்தி அதனைச் செவ்விதாக்கி முடிக்குங்கால் அதனைக் கண்டு வியந்து அவன் மேல் எவ்வளவு உவப்படைந்து அவனை விரும்புகின்றனர்! இங்ஙனமே மிகச் சிறிய முயற்சி முதல் மிகப்பெரிய முயற்சி ஈறாக அறிவில்லாதார் செய்வன பெரிதும் பிழைபட்டுத் துன்பத்தைத் தருதலும், அறிவுடையார் செய்வன பெரிதுந் திருத்த முற்று இன்பத்தைத் தருதலுஞ் சிறிதேனும் ஆழ்ந்து நினைப்பார்க்கு விளங்காமற் போகா. இதுபற்றியன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/150&oldid=1584370" இலிருந்து மீள்விக்கப்பட்டது