உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் 17

“அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்உடைய ரேனும் இலர்"

என்று அருளிச் செய்தனர்.

இனி, இத்துணைச் சிறந்த அறிவுங் கல்வியாலன்றி உண்டாகாது. கல்வியில்லாதாரிலும் அறிவால் மிக்கவரைக் காண்கின்றோமேயெனின், அவரும் முற்பிறவிகளிற் பயின்ற கல்வியின் பயனாலேயே அங்ஙனம் கூடப்பெற்ற அறிவும் இப்பிறவியில் மேலுமேலுங் கல்வியாற் பண்படுத்தப்பட் டாலன்றி, அது பாசி மூடிய பளிங்குமணி போல் திரும்பவும் அறியாமையில் அகப்பட்டு மங்கிப் போகும். ஆனதனாலேயே, உயர்ந்த கல்வியில்லாதவன் எவ்வளவு உயர்ந்த அறிவு கூறினாலும், அதனை அறிவால் நிறைந்தோர் ஏற்றுக் கொள்ள மாட்டார். இதனைக்,

“கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார்'

என்ற திருக்குறளுங் கூறுகின்றது.

இனிக் கல்வியுள்ளும் உலகநூற் கல்வி நிலையில்லாத பொருள்களையே உணர்த்துவதால், அதனால் விளையும் அறிவும் நிலையில்லாத இயல்பினதாய் நிலையான இன்பத்தைத் தரமாட்டாதாய் ஒழியும். அறிவுநூற் கல்வியோ உலக நிலை, உயிரின் நிலை, உயிரோடு ஒன்றாய் நிற்கும் அறியாமையின் நிலை, இருவினைத் தோற்றம், உயிர் மூவகைக் குற்றமும் நீங்கும் வகை, முழுமுதற் கடவுளின் இயல்பு, இது செய்யும் உதவி, அதனோ ான்றாயிருந்து இம்மை மறுமை இரண்டிலும் நுகரும் இன்பநிலை முதலானவற்றை ஆராயும் உயர்ந்த ஆராய்ச்சியில் அறிவைத் தோயவைத்து, அவ்வழியால் அதனைத் தூயதாக்கிப் பேரொளியோடு துலங்க வைத்தலின், அறிவுநூற் கல்வி கற்றார் முன் உலகநூற் கல்வி மட்டும் உடையார் விலங்கினம்போல் எண்ணப்படுவர். இவ்வுண்மை,

66

"விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்”

என்ற தெய்வத் திருவள்ளுவர் திருக்குறளால் நன்கு அறியப்படும். இத்திருக்குறளில் ‘இலங்கு நூல்' என்றது அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/151&oldid=1584372" இலிருந்து மீள்விக்கப்பட்டது