உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

141

அத்தேயங்களுக்கெல்லாம் அனுப்பி, ஆங்காங்குள்ள மக்களுக்குச் சமய அறிவையும் புகட்டி வருகின்றார்கள்.

இங்ஙனம் மேல்நாட்டவர் மற்றைக் கலையறிவுகளுடன் சமய அறிவிலுந் தாம் மேம்பட்டு விளங்குவதோடு, மற்றை நாட்டவரும் அதிற் சிறந்து விளங்க வேண்டுமென்னும் பேரிரக்கமுடையவர்களாய், அதற்கென்று தமது பொருளைக் கணக்கில்லாமற் செலவு செய்து வருதல் போல நம் நாட்டவர் தமக்கேனும் பிறர்க்கேனும் அங்ஙனஞ் செய்யக் கண்ட துண்டோ? நம் நாட்டிலுள்ளவர் ஓரினத்தவர் தமது சமயக் கல்விக்கேனுந், தம்மோடு உடன் உறையும் மற்றையினத்தவர் சமயக் கல்விக்கேனும் ஒரு காசாயினுஞ் செலவு செய்யக்

கண்டதுண்டோ?

அதுமட்டுமா! ஒரு சில இனங்களைச் சேர்ந்தவர்கள் தாம் வணங்குங் கோயில்களில், தம்மோடு ஓர் ஊரில் ஒருங்கு உறையும் வேறுசில இனத்தவர்களை உள்ளே நுழையவிடாமற், கிட்ட அணுகினால் அவர்களை வெட்டிச் சாய்க்கின்றார்களே! இவர்கள்தாமா ஒரு நாட்டவர்? இவர்கள் தாமா அருளொழுக் கத்திற் சிறந்தவராக நூல்களிற் புலனாகுஞ் சைவ வைணவ சமயாசிரியர் மரபில் வந்தவர்கள்? இத்தமிழ் நாட்டில் இவ்வொரு சில இனத்தார்க்குள்ள இறுமாப்பும் மனக்காழ்ப்புங் காடுமையும் வேறெங்கேனும் இருக்கக் கண்டதுண்டோ?

க்

D

இத்தகையவர்கள் கையிற் பொருள் மிகுதியாய்ச் சேர்வது எதற்கு? அவர்களின் கொழுப்பையுங் காழ்ப்பையுங் கொடுமை யையும் மிகுதிப்படுத்துதற்கன்றோ? இக் கொடியவர்கள் கையை விட்டு நீங்கி அப்பொருள் மேல்நாட்டவர் கையை அடைந்தால், அதனால் உலகிற்கு நன்மையே விளையுமல்லாது தீமை சிறிதும் உண்டாகாதென்பது நன்கு புலனாகவில்லையா?

கல்வியிலேயல்லாமற்

இனிச் சமயக் பிற கல்வித் துறைகளிலும் மேல்நாட்டவர் தமது பொருளை எத்தனை கோடிக் கணக்காய்ச் செலவு செய்கின்றார்களென்பதைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! மேல்நாட்டவர் இத்தமிழ்நாட்டில் வருவதற்குமுன் இங்கே உயர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றாயினும் இருந்ததா? திண்ணைப் பள்ளிக்கூடங்கள் சிலவே எங்கோ சில இடங்களில் வயிற்றுப் பிழைப்புக்கு இல்லா வாத்தியார்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/166&oldid=1584389" இலிருந்து மீள்விக்கப்பட்டது