உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் -17

நடத்தப்பட்டன; அவ்வாத்தியார்களிற் பெரும்பாலாரும் தமிழ் நன்கு கற்றறியாதவர். ஒரு சிறுவன் தமிழ் எழுத்துக்கள் எழுதப் படிக்கத் தெரிந்துகொள்வதற்கே நாலைந்து ஆண்டுகள் செல்லும். அக்காலத்தில் அச்சுப் புத்தகங்களேயில்லாமையால், உயர்ந்த தமிழ் நூல்களை எளிதிற் பெற்றுப் பயில்வதற்கே இடமில்லாமற் போயிற்று. இவ்வொட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடங்களிலுந், தாழ்ந்த குலத்தவராக எண்ணப்படுவோர் சேர்ந்து படித்தல் இயலாது. அஞ்ஞான்றிருந்த தமிழ்ப் புலவர் சிலரும் பொருள் வருவாய்க்கு வழியில்லாமையாற், செல்வர் சிலரையடுத்து அவரைப் பலவகையாலெல்லாம் புகழ்ந்து பாடிக் காலங் கழித்து வந்தார்கள்.

இவ்விரங்கத்தக்க நிலை இப்போது முற்றும் ஒழிந்து போயிற்றென்று சொல்லுதல் கூடாது. ஆனாலும், மேல்நாட்டவர் இந்நாட்டுக்கு வந்தபின், தமிழ் மக்கட்கும் பிறர்க்கும் விளைந்திருக்குங் கல்வி நலங்கள் எவராலும் மறுக்க முடியா! அவர்கள் இன்னார்க்குக் கல்வி கற்பிக்கலாம், இன்னார்க்குக் கல்வி கற்பிக்கலாகாது என்னும் வேற்றுமை சிறிதும் பாராதவர்களாய்க், கல்வியென்னும் நந்தாமணி விளக்கை எல்லார் கையிலும் கொடுத்து, அறியாமையென்னும் பேரிருளைக் கடந்து அறிவுலகத்துக்குச் செல்லும் ஒப்புயர்வற்ற வழியைக் காட்டி வருகின்றார்கள் அல்லரோ? பார்ப்பனக்குடி வேளாளக் குடிகள் இருக்குமிடங்களிலேயன்றிப், பள்ளச்சேரி பறைச்சேரிகளிலும் அவர்கள் நெடுகப் பள்ளிக்கூடங்கள் அமைத்துக் கல்வியையூட்டி எல்லார்க்கும் அறிவுக்கண்ணைத் திறப்பித்து வருதல் எல்லாரும் அறிந்ததன்றோ?

இனி,நன்செய், புன்செய்ப் பயிர்களை விளைத்தற்குங் குளங் கூவல் கிணறுகள் வெட்டுதற்கும் வீடுகள் கட்டுதற்கும், ஆடு மாடுகள் மேய்த்தற்கும் இன்னுந் தமக்கு வேண்டிய எத்தனையோ வேலைகளெல்லாஞ் செய்வித்துக் கொள்ளு தற்கும் இவ்வேழைக் குடிமக்களைப் பயன்படுத்தி, அவ்வழியால் திரண்ட சல்வத்தையடைந்து இனிது வாழும் நம் நாட்டு அரசர்களுங் குறுநில மன்னர்களும் மடாதிபதிகளுஞ் செல்வர்களுமோ வென்றால் அவ்வேழைகளுக்கு ஒரு வேளை நல்லுணவாவது அவர்கள் உடுத்துக் கொள்ளுவதற்கு ஓர் ஆறு முழத்துண்டாவது கொடுக்கின்றார்களா? இல்லை, ல்லை, இல்லை, அவர்கள் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/167&oldid=1584391" இலிருந்து மீள்விக்கப்பட்டது