உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

143

கற்பதற்கு ஒரு சிறு பள்ளிக்கூடமாவது வைத்து நடத்துகின் றார்களா? இல்லை. இல்லை.

இதுமட்டுமோ! அவ்வேழைகள் நம் மூர்த்தெரு வழியேயுஞ் செல்லல் ஆகாது, தாம் புழங்குந் தண்ணீர்த் துறைகளிலுந் தண்ணீர் முகக்கல் ஆகாது, “நான் பெரியவன், அவன் தாழ்ந்தவன். எனக்கு முதலில் திருநீறு துளசி கொடுக்க வேண்டும். அவனுக்கு அப்புறங் கொடுக்க வேண்டும்” என்று தமக்குள்ளேயே தம் பெருமையைக் காட்டிக்கொள்ளத் தாம் செல்லுங் கோபுர வாயிலிலும் அவ்வேழை மக்கள் அணுகுதல் ஆகாது என்று அவர்களைத் துரத்தி அடிக்கின்றார்கள். ஏதொரு தீங்குஞ் செய்யாது. எல்லா வகையிலும் நலங்களே செய்து, தம்மையுந் தம்மவரையும் இனிது வாழ வைக்கும் அவ்வெளிய மக்களுக்கு, மேற்குலத்தவராகத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லிக் கொள்ளும் மக்கட்போலிகள் எத்தகைய கைம்மாறு செய்கின்றார்கள்! பார்த்தீர்களா?

அருளிரக்கமுடையார் சிலர், இம்மக்கட்போலிகளைப் பார்த்து,“உங்களுக்கு நன்மையே செய்யும் இவ்வேழைகளை ஏன் இங்ஙனம் வருத்துகின்றீர்கள்?” என்று கேட்டால், ஊரார் எவர்க்குந் தெரியாத வடமொழியிற் பார்ப்பனர் தமது நன்மையையே கோரி, மற்றைப் பிறரையெல்லாம் இழித்து, அவர்க்குத் தீது செய்யுந் தீய எண்ணத்தோடு எழுதி வைத்திருக்குங் கொடிய மிருதி நூற் கட்டளைகளையெல்லாம் எடுத்து முழுநீளங்காட்டிக்,”கடவுளே வேதத்தில் இப்படிச் சொல்லி அப்படிச் சொல்லியிருக்கிறார், அவரவர் முற்பிறவியிற் செய்த வினைப்படிதானே இப்பிறவியில் மேற்குல கீழ்க்குலங்களிற் பிறந்து துன்புற வேண்டும்! அதற்கு நாம் என்ன செய்யலாம்!” என்று எளிதாகச் சொல்லி ஏமாற்றி விடுகிறார்கள்.

யிருக்கிறார்.

66

L

வடமொழி நூல்கள் நமக்கு உரியவைகள் அல்ல. நமக்குரிய எந்தப் பழைய தமிழ் நூல்களிலாவது இத்தகைய காடுமையை நம் போன்ற மக்கட்குச் செய்யும்படி ஏதேனுஞ் சொல்லியிருக் கின்றதா? நம் சைவ சமயாசிரியர்களெல்லாருஞ் சாதிவேற்றுமை சிறிதும் பாராது நடந்தும் பாடியும் இருக்கின்றனரே; நம் ஆசிரியர் செய்தபடியுஞ் சொல்லியபடியும் அல்லவா நாம் நடத்தல் வேண்டும்?" என்று அவ்வருளாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/168&oldid=1584392" இலிருந்து மீள்விக்கப்பட்டது