உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் 17

தாம் கற்ற வடநூற் கல்வி உலகினர்க்குப் பயன்படா தென்பதை நன்குணர்ந்திருந்துந், தாம் கல்லாத தமிழ்மொழிக் கல்வியே இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெரிது பயன்படு மென்பதை நெஞ்சாரத் தெரிந்திருந்தும் தாம் பயின்ற இருக்கு முதலான ஆரிய நூல்களிற் பல்வேறு சிறுதெய்வ வணக்கமும் மக்களின் நல்லொழுக்கத் துறைகட்கு ஆகாதனவும் வெறும் பொய்க் கதைகளும் நிறைந்திருத்தல் செவ்வனே அறிந்திருந்துந் தாம் பயிலாத ‘தொல்காப்பியம்’ ‘சங்க இலக்கியம்’, ‘திருக்குறள்’, 'சிலப்பதிகாரம்’, ‘தேவார திருவாசகம்”, 'பெரியபுராணம்', 'சிவஞான போதம்' முதலான அருந்தமிழ் நூல்களில் ஒரே முழுமுதற் கடவுள் வணக்கமும் மக்களின் நல்லொழுங்கத் துறைகட்கு இன்றியமையாது வேண்டுவனவும், உயர்ந்த உண்மை வரலாறுகளும் நிரம்பி விளங்கல் கேட்டிருந்தும், தாம் தமக்குரியவாகக் கருதியிருக்கும் வடநூல்களையே தெய்வ நூல்களாக உயர்த்துப் பேசித் தமக்குப் புறம்பாகத் தாம் கருதியிருக்குந் தமிழ் நூல்களையெல்லாம் மக்களிலுந் தாழ்ந்தவர்க்குரியவாக இழித்துப் பேசி இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் நிற்கும் ஆரிய மாந்தர்தம் அறிவு நிலை எத்தகையதென்பதையும் எண்ணிப் பாருங்கள்!

இவ்வாறாக இத்தமிழ்நாட்டிலுள்ள கற்றவர்கள் நிலையும் நடுவு நிலை நிரம்பியதாய், உண்மையை உள்ளபடி ஆராய்ந் துரைத்து மக்களை உண்மையறிவில் மேலெழச் செய்தலிற் சிறிதும் விருப்பு இல்லாமல் அவர் தம் முன்னேற்றத்திற்குப் பேரிடர் பயப்பது மாயிருத்தலை ஆழ்ந்து நினையவல்லார்க்கு, இந்நாட்டவரும் இவரிற் பலவகையில் வேறுபடாத வட நாட்டவரும் ஒருங்கு கெழுமித் தாமே தமது நாட்டை அரசுபுரிதல் கனவிலுங் கைகூடாதென்பது நன்கு விளங்காநிற்கும், இஃதிவ்வாறிருக்க,

இனி, மேல்நாட்டவரிற் கற்றாரின் அறிவு நிலையினைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! அவர்கள் தாம் பெற்ற செல்வ மெல்லாந் தமது கல்விப் பயிற்சிக்கே பயன்படுமாறு செய்து, தமது ஆங்கில மொழியை மிகத் திருத்தமாகவுந் தீஞ்சுவை யுடைய தாகவும் வழங்கி, அதன்கண் எல்லா வகையான நூல்களையும் ஆழ்ந்தாராய்ந்து தெளிந்த அறிவான் நாளு நாளும்

கலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/171&oldid=1584396" இலிருந்து மீள்விக்கப்பட்டது