உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

147

இயற்றி உலகமெங்கணுந் தமது மொழிப்பயிற்சியை ஒளிரச் செய்து வருகின்றார்கள்.

அதுமட்டுமோ! அவர்கள் அயல்நாட்டு மொழிகளையும் நன்கு பயின்று, அவற்றின்கண் உள்ள அரியபெரிய நூல்களையும் தமது ஆங்கில மொழியில் திருப்பி, அவற்றின் உண்மைகளையும் நடு நிலை வழாது எடுத்துக்காட்டி,அவைகளும் இவ்வுலகமெங்கும் பரவிப் பயன்தருமாறு செய்கின்றார்கள். மற்று, நம் இந்திய நாட்டு மக்கட் பகுப்பினரோ தாந்தாம் வழங்கும் மொழியையன்றித் தம்மிற் பிறவகுப்பினர் வழங்கும் மொழியையும் அதன்கண் உள்ள நூல்களையுங் கற்பதில் வேட்கை சிறிதுமில்லாராய் நிற்கும் அளவிலமையாது, அவற்றையும் அவற்றை வழங்கி வருவாரையும் இழித்துப் பேசியும் வாளா மாய்கின்றனர்.

இன்னும், மேல்நாட்டவர் தமக்குரிய கிறித்துவ சமயவுணர்ச்சியை இவ்வுலகமெங்கணும் பரவச்செய்தற்குத் தமது பொருளிற் பெரும்பகுதியைச் செலவிட்டு வருகின்றனரே யல்லாமல், தமது சமயவுணர்ச்சியை ஒரு கருவியாய்க் கொண்டு செல்வப் பொருளை அவர்கள் தேடித் தொகுத்தல் கண்டிலேம். மற்று, இந்நாட்டின்கண் உள்ள குருக்கள்மாரோ இந்து சமயப் பெயரால் அளவிறந்த கிரியைகள் சடங்குகளை வகுத்துவைத்து, அவற்றின் வாயிலாகச் செல்வர்கள் சிற்றரசர்கள் அரசர்களின் செல்வமெல்லாங் கவர்ந்து வருதலுடன், ஏழைக் குடிமக்கட்குரிய பொருளையுமுறிஞ்சி அவர்களையும் வறுமைக்கு

சிறு

இரையாக்கி வருகின்றார்கள்.

ஒருவன் பிறந்தது முதல் அவன் இறக்குமளவும், அவனும் அவனுக்குரியாருங் கடன்பட்டாயினுஞ் செய்து தீர்த்து விடும்படியாக அவர்கள் கட்டிவைத்திருக்குங் கிரியைகளையுஞ் சடங்குகளையும் அவற்றிற்காகச் செலவாகும் பொருட்டி ரளையுங் கணக்கிட்டுப் பாருங்கள்! ஒருவன் செத்தவுடனாவது இக்கிரியைகள் ஒழிகின்றனவா? இல்லை, இல்லை. அவன் செத்த பத்தாம் நாளிலுங் கிரியை, ஒவ்வொரு திங்களிலும் மறைநிலா நாளிலுங் கிரியை. ஒவ்வோராண்டிலும் அவன் இறந்த நாளிலுங் கிரியை.இங்ஙனங், கருவாய் வயிற்றிலிருக்கும் போதும், மகவாய்ப் பிறந்து அறை கழிக்கும் போதும், ஆடையுடுக்கும் போதுங், காது குத்தும்போதும், பள்ளிக்கூடத்திற் புகும்போதும், மணஞ்செயும் போதும், மனைவியுடன் கூடும்போதும், அறுபதாம் ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/172&oldid=1584397" இலிருந்து மீள்விக்கப்பட்டது