உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

நிறையும்போதும்,

மறைமலையம் -17 இறந்தபோதும்,

இறந்த பின்னருந்

தொடர்பான செலவிற் கிரியைகளைச் செய்து நம் தமிழ்மக்கள் வறுமையிற் கிடந்துழலுமாறு புரிந்து, அவர் தரும் பொருளாற் கொழுக்கத் தின்று இன்புற்று இரக்கமிலராய் வாழும் ஆரியக் குருக்கள் மார்தஞ் சூழ்ச்சியை எண்ணிப் பார்ப்போர் எவரேனும் உளரா?

இங்ஙனந்தொடர்பாகக் கிரியைகளைப் பற்றுமாறு கற்பித்து, அவற்றைத் தமிழர்கள் தாமே செய்யாமல் ஆரியராகிய தம்மைக்கொண்டே செய்வித்தல் வேண்டு மெனவும் வற்புறுத்தி, அவ்வாற்றால் தமிழர்கள் பொருளைப் பகற்கொள்ளை கொண்டு இனிது வாழும் ஆரியக் குருக்கள், தாம் தமிழர் இல்லங்களில் அங்ஙனந் தொடர்பாகச் செய்துவைக்குங் கிரியைகளை அவர்க்கு விளக்கும்படியான தமிழ் மொழியி லாவது சொல்லிச் செய்து வைக்கிறார்களா? அதுவும் இல்லை; தமிழர்க்கு எள்ளளவுந் தெரியாத ஆரியமொழிச் சொற்களை ‘மந்திரங்கள்' என உயர்த்தி ஏமாற்றிச் சொல்லி, அக்கிரியை களைச் செய்பவர்களாய், அவர்களைப் பாவை போல் ஆட்டி வைக்கிறார்கள்.

கடவுளைக் கண்டு பாடிய மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் முதலான தெய்வ ஆசிரியர்கள் அருளிச் செய்த தெய்வச் செந்தமிழ்த் திருப்பதிகங்களாந் தெய்வமாமறை மந்திரங்கள் இருக்க, அவற்றை இழித்து ஒதுக்கி, இந்நாட்டவர்க்குத் தெரியாத வடமொழிச் சொற்களைச் சொல்லி அக்கிரியை களைச் செய்யும் ஆரியக் குருமாரின் தீய எண்ணத்தைக் கண்டுணர்ந்து, அதனைப் பலரறியத் தெரிவிக்கும் அறிவாண்மை வாய்ந்தார் இத்தமிழரில் இல்லையே!

இன்னுஞ், சிவபிரான் திருக்கோயில்களில் வழிபாடு ஆற்றுங் குருக்கள்மார் தமிழரினத்தைச் சேர்ந்தவராயிருந்தும், அத்திருக்கோயில்களுக்கு வந்த சிறப்பெல்லாம் அவைகள் சைவசமயாசிரியராற் பாடப் பெற்றிருப்பது பற்றியேயென்பதை அவர்கள் நன்குணர்ந்திருந்தும், அவர்கள் தேவார திருவாசகச் செந்தமிழ் மந்திரங்களைக் கொண்டு இறைவனுக்கு வழிபாடு செய்யாமல், தமிழ் மக்களுக்குச் சிறிதும் புலனாகாத வடமொழிச் சொற்களை மந்திரங்களென உயர்த்துச் சொல்லி அவற்றைக் கொண்டே கோயில் வழிபாடு முழுதுஞ் செய்கின்றார்கள்.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/173&oldid=1584398" இலிருந்து மீள்விக்கப்பட்டது