உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

151

பொருளைப் பல வகையில் உறிஞ்சிவிடுவதொடு, தமிழறிஞரின் அறிவுரை அச்செல்வர்களின் செவியுற் நுழையாதபடிக்கும் மிக விழிப்பாக இருந்து தடை புரிந்து விடுகின்றார்கள். அதனால், இத் தமிழ்நாட்டிலுள்ள செல்வர்களின் பெரும் பொருள் தமிழ் மக்களின் அறிவு விளக்கத்திற்கும் அவர் தம் நல்வாழ்க்கைக்குஞ் சிறிதும் பயன்படாமற் போகின்றது!

ஊர்கடோறும் நகரங்க டோறும், 'இராமாயணம் ம்' முதலான கட்டுக்கதைப் ‘பிரசங்கம்’ நடைபெறச் செய்து அதன் வாயிலாக ஊரவர் பொருளை எளிதிற் கவர்ந்து கொள்வதுடன், அவ்வறிவில்லா மக்கள் உள்ளத்தில் தம்மையுந், தம்முடைய நூல்களையுந் ‘தேவர்' என்றுந் தேவர்க்குரிய வேதங்கள் என்றும் நம்பும் அசையாக் குருட்டு நம்பிக்கையும் பதியச்செய்து. அவ்வாற்றால் தம்முடைய ஆட்சியையும் முதன்மையையும் ஆரியப் பார்ப்பனர்கள் எங்கும் நிலைநாட்டிவிட்டார்கள்; இன்னும் அம்முயற்சியை நடத்தியே வருகின்றார்கள்; ஆங்கில நன்மக்கள் ஆங்காங்கு வைத்து நடத்தும் பள்ளிக்கூடங்களிற் கற்குந் தமிழ் மாணவரின் தமிழ்ப் பாடங்களிலெல்லாந் தம்முடைய புராணக் கட்டுக் கதைகளை நுழைத்து, இளமைப் பருவத்திலேயே அவை நம் சிறார் உள்ளத்திற் பசுமரத்தாணி போல் இறுக்கமாகப் பதிய வைக்கின்றார்கள்.

இவர்கள் இத்தமிழ்நாட்டைப் பாழ்படுத்தும் இவ்வளவு களை, உயர்நிலைகளிலுள்ள தமிழறிஞர் நன்கறிந்து வைத்துந் தமக்கு வரும் பொருள் வருவாயையோ தமது நிலை யுயர்வையோ மேலதாகக் கருதி அவரிழைக்குந் தீங்குகட் கெல்லாந் தாமும் உடந்தையாய் நின்று தம் அருமைச் சிறாரறிவைப் பாழாக்கி விடுகின்றனர்! இன்னும் ங்ஙனமே பார்ப்பனர்களாலும், அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போல் நடக்கும் ஒழுகலாறுகள் உடையராய் வடமொழிக்கும் வடநூல் கட்கும் ஏற்றஞ்சொல்லித் தமிழையுந் தமிழ் நூல்களையும் புறத்தொதுக்கி நடக்குஞ் சைவ வைணவர் களாலும் இந்நாட்டுக்கு விளைந்திருக் கின்ற தீமைகளை யெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இவ்வேடு இடங்கொள்ளாது.

ஆதலால், இந்நாட்டுக்கு நலந்தேடுபவராக வெளிவருந் தலைவர்கள் உண்மையாகவே தாம் நலஞ்செய்பவர்களா யிருந்தால், இப்போதுள்ள மிக இரங்கத்தக்க நிலைமையில் நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/176&oldid=1584404" இலிருந்து மீள்விக்கப்பட்டது