உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் 17

குடிமக்களை, நம் ஆங்கில அரசுக்கு மாறாகக் கிளப்பிவிட்டு அவர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பாழ்படுத்துஞ் செயலை விடுத்து,யாங்கூறும் நன்முயற்சிகளை விடாப் பிடியாய்ச் செய்து, அவர்களை ஆராய்ச்சியறிவிலும் இன்ப ஒருமை வாழ்க்கையிலும் பயன்படு முயற்சியிலும் முன்னேறுமாறு உதவி புரிதல் வேண்டும்.

முதலாவதாக, ஊர்கடோறும் நகரந்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் திறப்பித்துச், செல்வர்கள் வீட்டுப் பிள்ளை களைத் தவிர மற்றை எல்லாப் பிள்ளைகளும் பொருட் செலவின்றித் தனித் தமிழ் கற்கும்படி செய்தல் வேண்டும். அவர்கட்குக் கற்பிக்கும் நூல்களில் ஆரியக் கட்டுக்கதைகள் சிறிதும் விரவல் ஆகாது. ஒழுக்க முறைகளும், இயற்கைப் பொருள் இயல்புகளுஞ், சிற்றுயிர்களின் தன்மைகளும், ஆண்மையிற் சிறந்தாரின் வரலாறுகளும், மக்களின் நாகரிக வரலாறுகளும், உழவு வாணிகம் கைத்தொழில்கள் செய்யும் முறைகளுங், கடவுளின் நன்மைகளுங், கடவுளைக் கண்டு பாடிய சான்றோர் வரலாறுகளும், உண்மையாராயும் முறைகளும் இன்னும் இவை போன்றவைகளுமே அந்தந்த வகுப்புக்குத் தக்கபடி செந்தமிழில் எழுதப்படல் வேண்டும்.

இரண்டாவது தமிழ்கற்ற அறிஞர்களை ஆராய்ச்சி முறையிற் பயிற்றி ஊர்கடோறும் விடுத்துப் பொதுமக்கட்கு மேற்கூறிய பொருள்களை விளங்க எடுத்துச் சொல்லி, அவர்கள் நல்லறிவு பெறுமாறு செய்வித்தல் வேண்டும். ஊனுணவு ஒழித்தவர் ஊனுணவு ஒழியாதவர் என்னும் இருபிரிவினரன்றி, வேறு எவ்வகைச் சாதிப் பிரிவுஞ் சமயப் பிரிவும் இல்லாமல் ஒழித்தல் வேண்டும். பிறப்பு இறப்பு இல்லா எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளையே எல்லாரும் வணங்கும்படி செய்வித்தல் வேண்டும். பிறந்து இறந்த உயிர்களைத் தெய்வங்களாக வணங்குஞ் சிறு தேவதை வணக்கத்தையும் அவைகளுக்கு இடும் உயிர்ப் பலியையும் அறவே ஒழித்தல் வேண்டும்.

மூன்றாவது மேற்குறித்த நன்முயற்சிகளைச் செய்து

அவற்றால் விளையும் நலன்களை நிலைபெறுத்துதற்கு ஏராளமான பொருள் வேண்டியிருக்குமாதலால், வீணே கோடி கோடியான பொருட்டிரளை வைத்துக்கொண்டு அவற்றை மேற்குறித்த நன்முயற்சிகளுக்குப் பயன்படுத்தாமல் இறுமாந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/177&oldid=1584406" இலிருந்து மீள்விக்கப்பட்டது