உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

அழியாச்

மறைமலையம் 17

செல்வங்களாக்கிப்

பேரின்பத்தை

விளைவிக்குமென்பதனை நாம் சொல்லுதலும் வேண்டுமோ?

ஆக, இவ்வரும் பேருண்மையை நம்மிற் பெரும்பாலார் உணராமையினாலன்றோ தாம் கருக் கொண்டிருக்கும்போது பிழைபட நடந்து அதனால் தீய பிள்ளைகளைப் பெற்றுத் தம் வாழ்நாள் முழுதுந் துன்புற்றுப் பிறரையுந் துன்பத்திற்கு ஆளாக்குகின்றார்கள். ஆ! நம் பெண்மக்களின் பேதைமைச் சயல் நினைக்குந்தோறும் நம் உள்ளத்தை நீராய் உருக்குகின்றதே! நம் பெண்மக்களைப் பாதுகாத்து வரும் ஆண் மக்களாயினும் இவைகளையெல்லாம் எண்ணிப் பார்த்து அவைகளைச் சீர்திருத்துகின்றார்களாவென்றால்,பெரும் பாலும் ஆண்மக்களுங் கல்வியறிவு இல்லாதவர்களாகவே யிருத்தலால் அவர்களும் அது செய்யமாட்டாதவர்களாகவே இருக்கின்றனர். இங்ஙனம் ஆண்பாலார் பெண்பாலார் இருவரும் அறியாமை என்னும் இருளிற் குடியிருப்பவர் களானால் நாமும் மக்களும் முன்னேறுவதெப்படி? சொல்லுங்கள் அறிஞர்களே!

னியேனும் இங்ஙனம் பராமுகமாயிராமல் ஆண் பெண் என்னும் இருதிறத்தாரும் உயர்ந்த நூல்களைக் கற்றும், கற்றறிவுடையார் சொல்லும் பொருளைக் கேட்டும் அவற்றின்படி நடந்து நல்ல மக்களைப் பெறுதற்கும், பெற்ற மக்களைச் சீர்திருத்தி வளர்த்தற்கும் நிரம்பவும் முயற்சி செய்தல் வேண்டும். எல்லாம் ஊழ்வினையால் ஆகும் என்றும், அவரவர் ஊழ் வினைக்குத் ழ் தக்கபடிதான் நல்ல பிள்ளைகளோ தீய பிள்ளைகளோ பிறப்பரல்லது நம்மாலாவது ஒன்று மில்லை யென்றுஞ் சொல்லிச் சோம்பேறிகளாய் வாழ்நாளை வீண் நாளாகக் கழிப்பது பெரிய பொல்லாங்கினைத் தரும்.

ஊழ்வினையால் வந்த நோயை நம் செயலால் நல்ல மருந்துண்டு தீர்த்துக் கொள்வதுபோலப் பழவினையால் நமக்கு நேர்ந்த துன்பங்களையுஞ் சிவபெருமானை எண்ணி முயன்று நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மார்க்கண்டேயர் தமக்கு ஏற்பட் பதினாறு ஆண்டைச் சிவபெருமான் திருவருட் டுணையால் என்றும் பதினாறாக ஆக்கிக் கொள்ளவில்லையா? ஆதலால், நாமுந் தீய நினைவுகளையுந் தீய செயல்களையும் விட்டு முழுமுதற் கடவுளான சிவபெருமானை இடைவிடாது தொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/207&oldid=1584454" இலிருந்து மீள்விக்கப்பட்டது