உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

183

கொண்டும், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் உடை யராய் நடந்தும், அறிவுடையோர் நூல்களை டைவிடாது கற்றும், அவர் பொன்மொழிகளைக் கேட்டுந், தூய நினைவுந் தூய செயலும் உள்ளவர்களாய் ஒழுகி வருவோமாயின், உலகத்தாரால் நன்கு மதிக்கப்படும் நல்ல பிள்ளைகள் நமக்குப் பிறப்பார்களென்பது திண்ணம்.

பிள்ளைகள் நல்லவராவதற்குந், தீயவராதற்கும் நம் தாய்மார்களே முதன்மையான வழிகாட்டிகளாயிருத்தலால், அவர்கள் இக்கடமையின் பொருட்டாகவாவது நல்லறிவுடைய வர்களாய் நடக்க மிகவும் பழகிக் கொள்ளல் வேண்டும். தாய்மார் மிகவும் துன்புற்றுப் பிள்ளை பெறுதலும். பெற்ற பிள்ளை பலவகை நோய்களுக்கு இரையாகி மடிதலும், அங்ஙனம் மடியாது தப்பித்தவறிப் பிழைத்த பிள்ளைகளுந் தீயராய்ப் போதலும் எல்லாந் தாய்மார்களின் அறியாமையினாலும் தீய செய்கை யாலுஞ் சோம்பலாலும் விளையுந் துன்பங்களே யல்லாது வேறு இல்லையென்று என் அருமைத் தாய்மார்களே! நீங்கள் திண்ணமாய் நம்புங்கள்! நம் அருமைத் தாய்மார்கள் மட்டுங் கற்றறிவுடையவர்களாவும், நல்லன்பும் நல்லெண்ணமும் உடையவர்களாகவும் இருந்தால் இத்துன்பங்கள் தலைக்

காட்டுமா?

எல்லாரும் நல்லறிவுடையவராகவும் எல்லாரும் நல்லன்பும் நல்லெண்ணமும் நற்செய்கையும் உடையவராகவும் விளங்க, இந்நிலவுலகந் தேவர்கள் உறையும் வானுலகமேயாகி, இந்நில வாழ்க்கை தேவர்கள் வாழும் இன்ப வாழ்க்கையேயாகி, எல்லாம் இன்பமேயாய், எல்லாம் அன்பேயாய், எல்லாம் அருளேயாய் விளங்குமென்று உறுதியாய் நம்புங்கள்!

நம் மக்களுக்குச் செய்ய வேண்டிய இப்பெருங் கடமையை நாம் வழுவாது செய்து வருவோமாயின், எல்லாம் வல்ல சிவபெருமான் நமக்கு அருள்புரிவது திண்ணமென்றும் உறுதியாய் நம்புங்கள்! ஓம் சிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/208&oldid=1584455" இலிருந்து மீள்விக்கப்பட்டது