உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

20. ‘இந்தி* பொதுமொழியா? - 1937

இவ் இந்திய நாட்டின் வடக்கே பல ஊர்களிற் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் "இந்தி" மொழியை, இவ் விந்தியநாடு முழுதுமுள்ள மக்கள் எல்லாரும் பயின்று, அதனையே பொதுமொழியாக வழங்கிவரல் வேண்டு

மென்று, இந்நாட்டின் நன்மைக்காக உழைக்கும் வட நாட்டறிஞர் பலரும் தென்னாட்டறிஞர் சிலரும் பேசியும் எழுதியும் வருவதுடன், ஆங்காங்கு இந்திமொழிப் பள்ளிக் கூடங்களுந் திறப்பித்து நடத்தி வருகின்றார்கள். ஒரு நாட்டி லுள்ளார் நன்மைக்கென்று செய்ய எடுத்த ஒரு செயல், அந்நாட்டிலுள்ளார்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையதுதானா? அந்நாட்டவர் எத்தகைய நிலைமையில் இருக்கின்றனர்? அஃது அவர்க்கு வகையான நன்மையைச் செய்யும்? என முதலில் ஆராய்ந்து பார்த்துப், பின்னர் அதனைச் செய்தலே, உண்மையான அறிவும் உண்மையான தேயத்தொண்டும் வாய்ந்தார்க்கு இன்றியமையாத கடமையாம். ஆகையால், இந்திமொழி நம் நாட்டவர்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையதுதானா என்பதனை முதற்கண் ஆராய்வாம்.

பழைய நாகரிக மொழிகள்

எவ்

மக்களுள் ஒருவர் தமது கருத்தைப் பிறர் ஒருவர்க்கு இடர்ப்படாது தரிவித்துக்கொள்ளுதற்குக் கருவியா யுதவுவதே ஒரு மொழியின் முதற்பயனாகும். இந்நிலவுலகத் தின் பலபிரிவுகளில் உள்ள பல்வகை மக்கட் பகுப்பினருந் தாந்தாங் கருதியவைகளைத் தம்மொடு தொடர்புடை

  • நூல் முழுதும் உள்ள கிரந்த எழுத்து நீக்கப்பட்டுள்ளது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/209&oldid=1584456" இலிருந்து மீள்விக்கப்பட்டது