உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

197

வடநாட்டு இந்தி ந்தி முதலான மொழிகளின் பாடல்களிற் பெரும்பாலான, நம் போற் பலபிறவிகள் எடுத்துழன்று இறந்துபோன சிற்றரசர்களான இராமன், கிருஷ்ணன், பலராமன், வசுதேவன் முதலானவர்களைக் கடவுளாக வைத்து உயர்த்துப் பாடியிருத்தலால், அவை பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய எல்லாம்வல்ல சிவத்தை மக்கள் அறிந்து வழிபட்டுத் தமது பிறவியைத் தூய்மை செய்து உய்தற்குதவி செய்யாமையோடு, அவை உண்மைச் சிவ வழிபாட்டை அவர் அடையவொட்டாமலுந் தடைசெய்து மக்கட் பிறவியைப் பாழாக்குகின்றன. மற்று, மேற்காட்டிய தமிழ் நூல்களோ மெய்யான ஒரு தெய்வம் சிவமேயாதலை விளங்கத் தெருட்டிமக்களுக்கு மெய்யறிவையும் மெய்யன்பையும் ஊட்டி, அவர் இம்மையிலும் மறுமையிலும் அழியாப் பேரின்பத்திற் றிளைத்திருக்குமாறு செய்து, அவரது பிறவியைப் புனித மாக்குந் திறத்தன. அதுவல்லாமலும், இந்தி முதலான வடநாட்டு மொழிகள், தமிழைப்போற் பழையன அல்லாமையாலும்; அவற்றை வழங்கும் மக்கள், பழைமைதொட்டு நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்த தமிழ் மக்களைப்போல், நாகரிகவாழ்வு வாயாதவர்களாகையாலும்; சென்ற 400 அல்லது 500

ண்டுகளாகத் தோன்றிய வடநாட்டுப் புலவர்கள் பலரும், பண்டுதொட்டுத் தனித்த பேரறிவு வாய்ந்த தமிழ்ப் பெரும் புலவர் போலாது, சமஸ்கிருத புராணப் பொய்க்கதைகளை நம்பி அவற்றின் வழிச்சென்ற மயக்க வறிவினராகையாலும்; உயிர்க்கொலை, ஊன் உணவு, கட்குடி, பல சிறுதெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான பொல்லா ஒழுக்கங்களை அகத்தடக்கிய ஆரிய நூல்நெறிகளைத் தழுவிய வடவர், அவற்றை விலக்கி அருளொழுக்கத்தையும் ஒரே முழுமுதற்கடவுள் வணக்கத்தையும் வற்புறுத்தும் அருந்தமிழ்

நூல் நெறிகளைத் தழுவாமையாலும்; அவருடைய

மொழிகளையும் அவற்றின்கட் புதிது தோன்றிய நூல்களையும் நந்தமிழ் மக்கள் பயிலுதலால், இவர்கள் ஏதொரு நலனும் எய்தார் என்பது திண்ணம்.

இனி, இந்திமொழிகள் நாலுகோடி மக்களாற் பேசப் படுதலாகிய தொகை மிகுதியை வற்புறுத்திக் காட்டுவார்க்கு, வங்காளமொழி ஐந்துகோடி மக்களாலுந், தமிழுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/222&oldid=1584469" இலிருந்து மீள்விக்கப்பட்டது