உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் 17

தமிழோடினமான மொழிகளும் ஆறுகோடி மக்களாலும் பேசப்படும் பெருந்தொகை எடுத்துக்காட்டப்படும். இந்தியைப் பொதுமொழியாக்கல் வேண்டுமென்று ஒரு சாரார் கூறுவரேல், அதனினும் பெருந்தொகையினரான மக்களாற் பேசப்படும் 'வங்காள மொழி'யைப் பொதுமொழி யாக்கல் வேண்டுமென்று வங்காளரும், இவ்விந்திய நாட்டின் நால் எல்லைவரையிலும் பரவியிருக்குந் திராவிட மக்கள் எல்லார்க்கும் முதன்மொழியாவதும், இந்தியாவின் மட்டுமே யன்றி இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளிற் குடியேறி வாணிக வாழ்க்கையிற் சிறந்தாராயிருக்குந் தமிழ்மக்கள் அனைவராலும் வழங்கப் படுவதும் ஆன தமிழையே பொதுமொழியாகப் பயிலல் வேண்டுமென நந்தமிழ் மக்களும் வலியுறுத்துவரல்லரோ?

தமிழைப் பொதுமொழியாக்குதலின் நன்மை

இனி, இவ்விந்திய நாட்டுக்கு மிகப்பழைய மொழி களாய், அஃதாவது இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுப் பயிலப்படுஞ் சிறந்த நாகரிக மொழிகளாய் திகழ்வன தமிழுஞ் சமஸ்கிருதமும் என்னும் இரண்டேயாம். இவை யிரண்டனுட், சமஸ்கிருதம் பொதுமக்களாற் பேசப் படாமற் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இறந்து போயிற்று. மற்றுத் தமிழ்மொழியோ ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன்னேதொட்டு இயல் இசை நாடக இலக்கணங் களும், மக்கள் வாழ்க்கையின் பல துறைகளிலும் அறிவை விளக்கி இன்பத்தை ஊட்டும் அரிய பெரிய பல இயற்றமிழ் இலக்கிய நூல்களும் ஆயிரக்கணக்காக உடை யதாய், இன்றுகாறும் பலகோடி மக்களாற் பேசவும் எழுதவும் பயிற்சி செய்யவும் படும் உயிருடை நன்மொழியாய் உலவி வருகின்றது. தமிழிலுள்ள பழைய நூல்களெல்லாம் அருளொழுக்கத்தையும் ஒரே முழுமுதற் கடவுள் வணக்கத்தையும் அறிவுறுத்தி, உயிர்க்கொலை ஊனுணவு கட்குடி பல சிறுதெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான தீயவொழுக்கங்களைக் கடிந்து விளக்குகின்றன. இத்தீய வினைகளைச் செய்யுமாறு ஏவிப் பொய்யும் புளுகும் புகலும் ஆரிய நூல்களைப் போல்வன பழந்தமிழில் ஒன்றுதானும் ல்லை; பிறந்து துன்புற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/223&oldid=1584470" இலிருந்து மீள்விக்கப்பட்டது