உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

199

ருக்க

இறந்தொழிந்த மக்களையெல்லாங் கடவுளாக்கி, அவர் செய்யாதவற்றைச் செய்தனவாகப் புனைந்துகட்டிப் பொய்யாய் உரைக்கும் வடமொழிப் புராண கதைகளைப் போல்வன பழந்தமிழில் ஒன்றுதானும் இல்லை. பழந் தமிழிலுள்ள நூல்களெல்லாம் உள்ளவற்றை உள்ளவாறே நுவல்வன; மக்கள் தம் மனமொழி மெய்களால் நினைப்பனவுஞ் சொல்வனவுஞ் செய்வனவுமெல்லாந் தூயனவாய் வேண்டுமென்று வற்புறுத்துவன; மக்கள் வாழ்க்கையானது அன்பையும் அறத்தையும் இரண்டு கண்களாகக் கொண்டு, ஒரு தெய்வ வழிபாடாகிய உயிருடன் கூடி உலவ வேண்டுமென உயர்த்துக் கூறுவன. பிற்காலத்தில் வடசொற் கலப்பும் வடநூற் பொய்க் கொள்கைகளுங் கதைகளும் விரவிய மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் அளவின்றிப் பெருகித் தமிழ் மக்களை அறியாமையிலும் பொய்யிலும் பல தீவினைகளிலும் படுப்பித்திருந்தாலும், விழுமிய பண்டைத் தமிழ்நூற் பயிற்சியுஞ் சைவசித்தாந்த மெய்யுணர்வுந் திரும்பப் பரவத் துவங்கியபின், ஆரியப் பொய்ந்நூல் வலி தேய்ந்து வருகின்றது. அதனுடன் மேல்நாட்டு வெள்ளைக்கார மெய்யறிவினரின் அரிய பெரிய ஆராய்ச்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியின் வாயிலாக இவ்விந்திய நாடெங்கும் பரவி வருவதும் ஆரிய நூற் பொய்ம்மை விரைந்து தேய்தற்குப் பெரிதுந் துணை செய்து வருகின்றது. இவைகளையெல்லாம் நடுநின்று நோக்கவல்ல உண்மைத் தேயத் தொண்டர்கள் உளராயின், இவ்விந்திய நாட்டுக்கு மிகப் பழைய மொழியாய் இருப்பதுடன், இன்று காறும் பல கோடி மக்களாற் பேசப்பட்டு வரும் உயிருடை மொழியாயும், இவ்விந்திய மக்களை எல்லாத் துறைகளிலும் மேலேற்றத் தக்க பல சீரிய நூல்களை உடையதாயும் உள்ள தமிழ்மொழியையே இவ்விந்திய தேயம் முழுமைக்கும் பொதுமொழியாக்க அவர் முன் வந்து முயலல் வேண்டும்.

மேலுந், தமிழ்மொழி வழங்குந் தமிழ் மக்கள் இத் தென்னாட்டின் மட்டுமேயன்றி நடு நாட்டின்கட் பங்களூர், மைசூர், சிகந்தராபாக்கம் முதலியவற்றிலும், மேற்கே புனா, பம்பாய் முதலிய இடங்களிலும், வடக்கே கல்கத்தா, காசி முதலான நகர்களிலுங், கிழக்கே காக்கிநாடா, நெல்லூர் முதலான ஊர்களிலும் பெருந்தொகையினராய்க் குடியேறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/224&oldid=1584471" இலிருந்து மீள்விக்கப்பட்டது