உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் -17

யிருந்து வாணிக வாழ்க்கையிற் சிறந்து வாழ்கின்றனர். தமிழ் மக்கள் இவ்விந்திய தேயத்தின் மட்டுமேயன்றி, இதற்கு அப்பாலுள்ள எல்லாத் தேயங்களிலும் போய் வைகி வாழ்ந்து வருவதும் முன்னமே காட்டினாம். இங்ஙனம் எல்லா வகையாலுஞ் சிறந்த தமிழ்மொழி இவ்விந்தியநாடு முழுமைக்கும் பொதுமொழி யாதற்குரிய நலங்கள் எல்லாம் வாய்ந்ததாயிருந்தும், அதனைப் பொதுமொழியாக்க முயலாமல், நானூறு ஐந்நூறு ஆண்டுகளாகவே தோன்றியப் பழைய சிறந்த நூற்செல்வ மின்றி வறியனவாய் பலவகைக் குறைபாடுகள் உடையனவாய்ப் பெரும்பாலும் நாகரிகமில்லா வடவர்களாற் பேசப்படும் 'இந்தி' முதலான சிதைவுக் கலப்பு மொழிகளை இத்தேயத்திற்குப் பொதுமொழியாக்க வேண்டு மன்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவரா வென்பதனை அறிவுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

L

தமிழ் அல்லாத மொழிகள் வறியன புதியன

இனித், தமிழ் அல்லாத மற்றை மொழிகள், தமிழுக்கு மிகப் பிற்பட்ட காலத்தே தோன்றித், தமக்கென இலக்கண இலக்கிய நூல்கள் இல்லாமற், பாரசிகம் அராபி சமஸ்கிருதம் முதலான பழைய மொழிகளிலுள்ள புராணங்கள் காவியங் கள் அவற்றின் கதைகளையே மொழிபெயர்த்துரைப்பனவுந் தழுவி யுரைப்பனவுமாதலைச் சிறிது விளக்குவாம். இந்தி யின் உட்பிரிவான சில மொழிகளிற்றோன்றிய நூல்கள் இற்றைக்கு 500 ஆண்டுகளுக்குள் இயற்றப்பட்டனவாதலை மேலே விளக்கிக் காட்டினாம்; அந்நூல்களிற் சிறந்தனவாக வடவராற் கொள்ளப்படுவன கபீர்தாசர் இராமன்மேற் பாடிய பாடல்களும், இற்றைக்கு 314 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘துளசிதாசர்’ இயற்றிய 'இராமசரிதமானசம்' என்பதுமாகும். இனி,

உருது' மொழியென்பது சமஸ்கிருதக் கலப் பின்றி, மேற்கேயுள்ள பாரசிக அராபி மொழிச் சொற்கள் சொற்றொடர்கள் மிகுதியுங் கலக்கப் பெற்றதாய், அம் மொழிப் புலவர்களின் போக்கைப் பின்பற்றி நடை பெறுவதாகும். இற்றைக்கு 157 ஆண்டுகளுக்கு முன் 'ஔரங்கபாத்தி'லிருந்த ‘சௌதா’ என்னும் புலவரே முதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/225&oldid=1584472" இலிருந்து மீள்விக்கப்பட்டது