உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

201

முதல் உருதுமொழியிற் செய்யுள் நூல் இயற்றி, அதனைப் பலரும் பயிலும்படி செய்தவராவர். இவர் பாடிய செய்யுட் களிற் பல ‘நவாபு' மன்னர்களைப் புகழ்ந்து பாடுவனவாயும், வேறு பல மகமது முனிவரையும் அவர் தம் உறவினரையுஞ் சிறப்பித்துரைப்பனவாயும், மற்றும் பல தம்மால் உவர்க்கப் பட்டவைகளைப் பழித்துக் கூறுவனவாயும் இருக்கின்றன. இப்புலவர் காலம் முதற்கொண்டே, அஃதாவது இற்றைக்கு 180 ஆண்டுகளாகவே உருது மொழி நூல் வழக்குடையதாகி நடைபெறும் வகை நினைவுகூரற்பாலதாகும்.

இனி, வடக்கே வங்காளத்திற் பெருந் தொகுதியினரான மக்களாற் பேசப்படுவதுஞ், சமஸ்கிருதச் சிதைவுகளான சொற்கள் மிகக் கலக்கப்பெற்றதுமான ‘வங்காள' மொழி, நூல் வழக்குடையதாகத் துவங்கியது. இற்றைக்கு 400ஆம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘காசீராம்' என்னும் புலவர் வடமொழியிலுள்ள மகாபாரதத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்துச் செய்த காலந்தொட்டேயாம். அவர்க்கு நெடுங்காலம் பின்னே தோன்றிய 'ராஜராம் மோகன்ராய்’ என்னும் அறிஞர் வங்காள மொழியுரை நடையிற் பல சிறந்த ஆராய்ச்சி நூல்களுஞ் சீர்திருத்த நூல்களும் வரைந்து வெளிப்படுத்திய பின்னே தான் வங்காள மொழி பெருஞ் சிறப்படைய லாயிற்று. ஆகவே, சென்ற 150 ஆண்டுகளாகத் தாம் வங்காள மொழி சீர்திருத்த முற்றுச் சிறக்கலா யிற்றென்பதை உணர்தல் வேண்டும்.

இன்னும், மராட்டி, குஜராத்தி முதலான மொழிகள், பாகதச் சிதைவுஞ் சமஸ்கிருதச் சிதைவுமான சொற்கள் சொற்றொடர்கள் நிரம்பக் கலக்கப்பெற்றுச் சிறுதொகை யினரான மக்களாற் பேசப்பட்டு வருகின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்த ‘நாமதேவ்' என்பவர் தாம் முதன் முதல் மராட்டி மொழியிற் சில பதிகங்கள் இயற்றினவர். அவர் காலத்தும் அவர்க்குப் பிற்காலத்தும் வந்த ‘திந்யா நோபா,' ‘ஏகநாத்' ‘ராம்தாஸ்', 'மகீபதி' முதலிய புலவர்கள் வட மாழியிலுள்ள 'பகவத்கீதை', 'விஷ்ணு புராணக்கதை’, 'இராமன் கதை’, ‘சமயக் கிரியை’, ‘பக்த விஜயம்', முதலானவை களைத் தழுவி நூல்களும் பாட்டுகளும் மராட்டி மொழியில் இயற்றினார்கள். என்றாலும், மராட்டி வேந்தனான 'சிவாஜி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/226&oldid=1584474" இலிருந்து மீள்விக்கப்பட்டது