உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் -17

காலமுதற் கொண்டுதான், அஃதாவது சென்ற 300 ஆண்டு களாகத் தாம் மராட்டி மொழி நூல் வழக்குடையதாகி நடைபெறுகின்ற தென்பது உணரற்பாற்று.

குஜராத்தி மொழியில் முதன்முதற் சில பாடல்களைப் பாடினவர் இற்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நரசிங்கமேதா' என்பவரேயாவர். ஆனாலுங், கி.பி. 1681ஆம் ஆண்டில் அஃதாவது இற்றைக்கு 256 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘ப்ரேமானந்தபட்' என்பவரும், 'ரேவாசங்கர்’ என்பவரும் 'நரசிங்க மேகேதாநு', என்னும் நூலையும் 'மகாபாரதத்'தையும் இயற்றிய பின்னர்தான் குஜராத்தி

மொழிநூல் வழக்குடையதாயிற்று.

இனி, இவ்விந்திய நாட்டின் தெற்கே வழங்கும் மொழி கள் அத்தனையுந் தமிழோடு இனமுடையவைகளாகும். அதனால், அவை 'திராவிடமொழிகள் திராவிடமொழிகள்” என்று வழங்கப் படுகின்றன. அம்மொழிகள் எல்லாவற்றுள்ளும் நந்தமிழ் ஒன்றே சிறிதேறக்குறைய பத்தாயிர ஆண்டுகளாகச் சீர் திருத்தமுற்று, நுண்ணறிவு மிக்க சான்றோர்களால் இயற்றப் பட்ட இயல் இசை நாடக இலக்கணங்களும் ஆயிரக் கணக்கான பல்வேறு இலக்கியங்களும் உடையதாய், நூல் வழக்கும் உலக வழக்கும் வாய்ந்து நடைபெறுவதென்பதை முன்னரே விளக்கிக் காட்டினாம்.

இனி, ஏனைத் திராவிட மொழிகளுள் தமிழோடொத்த பழைமையுஞ் சிறப்புந் தனித்தியங்கும் ஆற்றலும் பழைய தனி இலக்கண இலக்கிய நூல்வளனும் உடையது ஏதுமேயில்லை. என்றாலுந், தமிழல்லாத மற்றைத் திராவிட மொழிகளை நோக்கக் ‘கன்னட மொழி' ஒன்றே சிறிதேறக்குறைய ஆயிர ஆ ண்டுகளாகச் சீர்திருத்தம் எய்தி நூல் வழக்குடையதாய் வழங்கா நிற்பது. இதனை முதலிற் சீர்திருத்தி வழங்கியவர்கள் சமண் சமயத்தினரும் அவரை அடுத்து அதன்கண் நூல்கள் இயற்றியவர்கள் வீரசைவ சமயத்தினரும் ஆவர். கன்னட மொழியில் முதன்முதல் நூல் இயற்றினவர் இற்றைக்கு 1060 ஆண்டுகளுக்கு முன் 63 ஆண்டுகள் அரசுபுரிந்த “ராஷ்டரகூட மன்னனான நிருபதுங்கனது அவைக்களத்திருந்த 'ஸ்ரீவிஜயர்’ என்னும் புலவரேயாவர்; இவர் இயற்றிய நூல் ‘கவிராஜ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/227&oldid=1584475" இலிருந்து மீள்விக்கப்பட்டது