உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

203

நூல்கள்

மார்க்கம்' என்னும் பெயருடையது. பசவரைத் தலைவராய்க் கொண்ட வீரசைவ ஆசிரியர்களாற் ‘பசவபுராணம்' என்பது கி.பி.1369ஆம் ஆண்டிலும், 'பத்மராஜ புராணம்' என்பது கி.பி. 1385ஆம் ஆண்டிலும் ஆக்கப்பட்டன. இவ்விரு சமயத்தவர்க் கிடையே தோன்றிய வைணவ சமய ஆசிரியர்களாற் 'பாரதம்’, இராமாயணம்’, பாகவதம்' முதலான பல சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்டன. ஆயிர ஆண்டுகளுக்கு முன்னே வழங்கிய கன்னட மொழி தனித்தமிழாயிருக்க, அதற்குப் பின்னே சைன வீரசைவ வைணவப் புலவர்களாற் கையாளப்பட்ட கன்னடமோ வடமொழிச்சொற்கள் சொற்றொடர்கள் கதைகள் நிரம்பக் கலக்கப் பெற்றுத் தன்றன்மையிழந்து வழங்குவதாயிருக் கின்றது. ஆனாற், பழைய தனிக்கன்னடத்தில் இயற்றப்பட்ட நூல் ஒன்றுதானும் இஞ்ஞான்று கிடைத்திலது.

இனிக், கன்னடத்திற்கு அடுத்தபடியிற் பழைமை யுடையதாகக் கருதற்குரியது தெலுங்கு மொழியேயாகும். இம்மொழியை வழங்கினவர்கள் ‘ஆந்திரர்' எனப் பழைய இந்துதேய வரலாற்றின்கட் சொல்லப்படுகின்றனர். 'சாத வாகனர்க்'குரிய ஆந்திரகுலமானது கி.மு. 180 ஆண்டிலேயே, அஃதாவது இற்றைக்கு 2117 ஆண்டுகளுக்கு முன்னரேயே வலிமையிற் சிறந்த அரசர்களையுடையதாயிருந்தது. அதன் அரசர்கள் ‘கிருஷ்ண' ஆற்றங்கரையில் உள்ள 'தான்யகடகம்’ அல்லது ‘அமராவதி' என்னும் நகரில் நிலையாயிருந்து அரசுபுரிந்தார்களென்பதும், இவர்கள் பௌத்த சமயத்தைத் தழுவியவர்களென்பதும்; இவர்களது அரசு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் முடிவடைந்து போயிற்றென்பதும் இத்தேய வரலாற்று நூல்களால் அறியக்கிடக்கின்றன. அத்துணைச் சிறந்த அவ்வரசர்கள் அக்காலத்தே தெலுங்கு மொழியை வழங்கியிருந்தனராயின், அதன்கட் பல நூல்கள் எழுதப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பழைய நூல்கள் எவையுந் தெலுங்கு மொழியிற் காணப்படாமையால் அவ்வாந்திர அரசர் காலத்தே தெலுங்குமொழி வழங்கவில்லை யென்பதே தேற்றமாம். அப்பழைய காலத்தே அவர் வழங்கிய மொழி தமிழே என்பது பழைய தமிழ்நூல் ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஆய் என்னுந் தமிழ் வள்ளல் வேளிர் குடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/228&oldid=1584476" இலிருந்து மீள்விக்கப்பட்டது