உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் 17

குரியனாதல் பற்றி வேள் ஆய் எனவும், அண்டிர நாட்டின னாதல் பற்றி 'வாய்வாள் அண்டிரன்” எனவும் புறநானூற்றுச் செய்யுட்கள் (133, 131) நுவல்கின்றன. 'அண்டிரம்' என்னுஞ் சொல் ‘ஆந்திரம்' எனத் திரிந்ததோ, அல்லது ஆந்திரமே அண்டிரம் எனத் திரிந்ததோ, இதுதான் உண்மையென்பது இப்போது காட்டல் இயலவில்லை. அஃதெங்ஙனமாயினும் பழைய ஆந்திர அரசர்கள் வழங்கியதும் போற்றி வளர்த்ததுந் தமிழ் மொழியேயென்பது மட்டும் பழைய நூலாராய்ச்சியால் நன்கு புலனாகின்றது.

6

6

L

தமிழ்

800-

ஒரு

இனி, இத்தென்றமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, நாகரிகத்தின் மிகச்சிறந்து, தமது தமிழ் மொழியை இலக்கண இலக்கிய வளன் உடையதாக்கி, அதனை நிரம்பவுந் திருத்த மாக வழங்கிய பழைய தமிழ் மக்கட்கும், வடக்கே சென்று குடியேறிய பழைய தமிழர்க்கும் இடை டையே போக்கு வரவு நிகழாமையால் வடக்கே சென்று வைகியவர் நாகரிகம் இல்லாதவராக, அவர் வழங்கிய தமிழும் நூல் வழக்கில்ல தாய்ச் சொற்றிரிபு மிகவுடையதாகி, அதனாற் பிறிதொரு மொழிபோல் ‘தெலுங்கு' எனப் பிற்காலத்தே பிறிதொரு பெயர் பெற்று நடைபெறலாயிற்று. இற்றைக்கு ஆண்டுகளுக்கு முன், அஃதாவது கி.பி. பதினொராவது நூற்றாண்டுக்கு முன், இயற்றப்பெற்ற ஒரு தெலுங்கு நூலாவது, ஆந்திர அரசர்களாற் பொறிப்பிக்கப்பட்ட கல்வெட்டாவது, எவ்வளவோ நம் ஆங்கில அரசினர் தேடிப் பார்த்தும், இதுகாறும் அகப்படவில்லை. அதனால், 800- ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு மொழி சீர்திருத்தம் எய்தி நடைபெறவில்லை என்பது திண்ணமாய்ப் பெறப்படுகின்றது. கி.பி.11ஆம் நூற்றாண்டிற் றோன்றிய நன்னயபட்டர் என்பார், கி.பி. 1022-முதல் 1063 வரையில் அரசுபுரிந்த சாளுக்கிய மன்னனான 'ராஜராஜ நரேந்திரன்' செய்த வேண்டுகோளுக் கிணங்கி, வடமொழியிலுள்ள 'மகாபாரதத்'தை ஆரணிய பருவம் வரையிலுந் தெலுங்கில் மொழிபெயர்த்தியற்றிய காலந்தொட்டே தெலுங்கு மொழி நூல் வழக்குடைய தாயிற்று. நன்னயர் இயற்றிய மாபாரத தெலுங்கு மொழி பெயர்ப்பில் வடசொற்கள் இரண்டு பங்குந் தெலுங்குச் சொற்கள் ஒரு பங்குமே காணப்படுதலால், தெலுங்குமொழி அந்நாளிலேயே

வடமொழியின் உதவியின்றித் தனித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/229&oldid=1584477" இலிருந்து மீள்விக்கப்பட்டது