உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

205

தியங்கும் ஆற்றல் இல்லாததொன்றாய் நடைபெற்றமை தெற்றென விளங்கா நிற்கும்.

L

இனித், தமிழ்நாட்டை யடுத்துள்ள மேல்நாடுகளில் இப்போது வழங்கும் மலையாளமொழி, இற்றைக்கு முந் நூறாண்டுகளுக்குமுன் முழுதுந் தமிழாகவேயிருந்தது. ஆனால், அத்தமிழ், இத்தமிழ் நாட்டில் வழங்குஞ் செந்தமிழ் மொழியின் சொற்கள் திரிந்த கொச்சைத் தமிழாகும். என்றாலும், அத்திரிபுகளை நீக்கிப் பார்த்தால் மலையாளம் முற்றுந் தமிழ் மொழியாகவே காணப்படுகின்றது. மலையாள மொழியில் முதன் முதல் இராமாயணத்'தை மொழிபெயர்த்துப் ாடியவர் 'கன்னச 'கன்னச பணிக்கர்' என்பவரேயாவர்; இவர் இற்றைக்கு 587 ஆண்டுகளுக்கு முன், அஃதாவது கி.பி.1350ஆம் ஆண்டில் இருந்தவர். இவர் இயற்றிய இராமாயண மொழி பெயர்ப்பில், வடசொற்கள் சிற்சில மிக அருகி ஆங்காங்குக் காணப்படுகின்றன. இவர்க்குப் பின் மலையாள மொழியில் நூல் இயற்றினவர் கி.பி. 1550ஆம் ஆண்டில் இருந்த 'செருச்சேரி நம்பூதிரி' என்பவரேயாவர். இவர் பார்ப்பனச் சாதியின ராயிருந்தும், இவர் தாம் இயற்றிய 'கிருஷ்ணகதா' என்னும் நூலைப் பெரும்பாலும் வடசொற் கலவாத் தனி மலையாள மொழியில் ஆக்கியிருப்பது மிகவும் பாராட்டற் பாலதாய் இருக்கின்றது. இவர்க்குப் பின் கி.பி. 1650ஆம் ஆண்டிலிருந்த எழுத்தச்சன்’ என்பாரோ வடமொழியிலிருந்து தாம் மொழி பெயர்த்தியற்றிய 'மாபாரதத்’திலும் வேறு சில புராணங் களிலுந் தொகுதி தொகுதியாக வடசொற்கள் சொற்றொடர் களை அளவின்றிப் புகுத்தி மலையாள மொழியைப் பாழாக் கினவராவர். ஈண்டுக் காட்டியவாற்றால், மலையாளமொழி வடமொழிக் கலப்பால் தமிழின் வேறாய்ப் பிரிந்து வேறொரு மொழிபோல் வழங்கலானது இற்றைக்குச் சிறிதேறக்குறைய முந்நூறாண்டுகளாகத் தாம் என்பது தெற்றென விளங்கா

நிற்கும்.

என்றிதுகாறும் எடுத்து விளக்கியவாற்றால், இப்போது இவ்விந்திய தேயத்தின் வடக்கே வழங்கும் ‘உருது’, 'இந்தி', வங்காளி' முதலான மொழிகளிலும், மேற்கே வழங்கும் ‘மராட்டி’, ‘குஜராத்தி’ முதலான மொழிகளிலுங், கிழக்கே தெற்கே நடுவே வழங்குந் ‘தெலுங்கு’, ‘தமிழ்’ ‘கன்னடம்’,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/230&oldid=1584479" இலிருந்து மீள்விக்கப்பட்டது