உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் -17

மலையாளம்' முதலான மொழிகளிலுந், தமிழைத் தவிர, மற்றையவெல்லாம் பழையன அல்லவாய், ஆயிர ஆண்டு களுக்குள்ளாகவே தோன்றித், தமக்கெனச் சிறந்த இலக்கண இலக்கிய நூல்கள் இல்லாமற், சமஸ்கிருதத்திலுள்ள மாபாரதம் இராமாயணம் பாகவதம் முதலான கட்டுக்கதை நூல்களை மொழிபெயர்த் துரைப்பனவாய்த் தாமே தனித்தியங்க மாட்டாமல் வடமொழிச் சொற்கள் சொற்றொடர்களின் உதவியையே பெரிதுவேண்டி நிற்பனவாய் உள்ள சிறுமையும் வறுமையும் வாய்ந்தனவாகும்.

தலபுராணங்கள்'

மற்றுத், தமிழ்மொழியோ, மேற்காட்டிய மொழிகள் எல்லாந் தோன்றுதற்குப் பத்தாயிர ஆண்டுகளுக்கு முன்னமே வழங்கிய முதுமொழியாதலொடு தன்னோடொத்த பழமை யுடைய ஆரியம், செண்டு, ஈபுரு, கிரேக்கம், இலத்தீன் முதலான மொழிகளெல்லாம் உலக வழக்கில் இன்றி இறந்தொழியவுந், தான் இன்றுகாறும் பரவி வழங்குந் தனிப்பெருஞ் சிறப்பு உடையதாயுந் திகழா நிற்கின்றது. சென்ற அறுநூறு எழுநூறு ஆண்டுகளுக்குள்ளாக வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து இயற்றப்பட்ட ‘கம்பராமாயணம்”, “நளவெண்பா’, ‘நைடதம்’ வில்லிபுத்தூரர் பாரதம்', 'காசி காண்டம்’, ‘கூர்மபுராணம்', ாயு புராணம்', 'தலபுராணங்கள் முதலியன தவிர, எழுநூறாண்டுகளுக்கு முன்னிருந்த செந்நாப் புலவர்களால் ஆக்கப்பட்ட அரும்பெருந் தமிழ் நூல்களெல்லாமுந் தமிழ் மொழிக்கே உரிய சிறப்புடையனவாகும்; இன்னும் இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட செந் தமிழ் நூல்களோ வடசொற்களும் வடநூற் பொய்களுஞ் சிறிதும் விரவாத தனிப்பெருஞ் சிறப்புடையனவாகும். மேலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்த், தமிழ்மொழியொன்றே வ்விந்திய தேயம் எங்கும் பேசப்பட்டு வந்த பொது மொழியாகும். இப்போது இவ்விந்திய நடுநாடுகளிற் ‘கோண்டர்' எனப்படும் மாந்தர் பேசும் மொழியும், ஒரிசா நாட்டையடுத்த மலைநாடுகளிற் 'கொண்டர்' எனும் மக்கள் பேசும் மொழியும், வங்காள தேயத்தின் ராஜமால் மலை களில் உறையும் ‘மாலர்' என்னும் மக்கட் குழுவினர் வழங்கும் மொழியும், சூடியா நாகபுரத்திலும் அதனையடுத்த நாடு களிலும் இருக்கும் ‘ஓராஓனர்' என்னும் மாந்தர் கூட்டம் பேசும் மொழியும், வ்விந்திய தேயத்தின் வடமேற்கேயுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/231&oldid=1584480" இலிருந்து மீள்விக்கப்பட்டது