உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

207

பெலுசித்தானத்தில் உயிர் வாழும் பிராகுவியர் என்பார் வழங்கும் மொழியும் இன்னும் இங்ஙனமே இமயமலைச் சாரலிலும் பிற வடநாடுகளிலும் வழங்கும் பல்வேறு மொழிகளும் பண்டைத்தமிழ் மொழியின் திரிபுகளாய் இருத்தலை நடுநின்று நன்காராய்ந்து கண்ட கால்டு வெல் முதலான மேல்நாட்டாசிரியர்கள், மிகப்பழைய காலத்தே இவ்விந்தியதேயம் முழுதும் பரவியிருந்தவர்கள் தமிழ் மக்களேயாவரென்றும், அவர் வழங்கியவை தமிழுந் தமிழின் திரிபான மொழிகளுமே யாகுமென்றும் முடித்துச் சொல்லி ருக்கின்றார்கள். இஞ்ஞான்று இவ்விந்தியதேயம் எங்கணும் வைகி உயிர்வாழுந் தமிழருந் தமிழரோடு இனமான மக்களும் ஆறரைக் கோடிக்கு மேற்பட்டவராவர் என்பதும் அவராற் கணக்கிடப்பட்டிருக்கின்றது. இவ்விந்திய தேயம் முழுது முள்ள மக்களின் தொகை முப்பது கோடியாகும்.

தமிழ் பொதுமொழியாகாத காரணம்

இங்ஙனந் தமிழ்மொழி யானது, ஆறரைக்கோடி இந்து மக்கட்குப் பொது மொழியாயும், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தொட்டு இன்றுகாறும் வழங்குந் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த தனித்தலைமை மொழியாயும், வேறெந்த மொழி களிலுங் காணப்படாத தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், சிவஞானபோதம், திருத்தொண்டர் புராணம் முதலான ஒப்புயர்வில்லா இலக்கண இலக்கிய நூற் பெருஞ்செல்வம் வாய்ந்த மாழியாயும் விளங்குவ தாயிருந்தும், இஃது இவ்விந்திய தேயத்திற்குப் பொதுமொழி யாகாமல் நிற்பது பெரியதொரு புதுமையாயிருக்கின்ற தன்றோ? இதற்குக் காரணந்தான் என்னையென்பதைச் சிறிதாராய்ந்து பார்ப்பாம்.

இப்போது உலகம் எங்கணும் பரவி வழங்கும் ஆங்கில மொழியின் றன்மையினை ஆராய்ந்து பார்மின்கள்! ஆங்கில மொழிக்கே உரிய வெள்ளைக்கார நன்மக்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து என்னும் மூன்று தீவுகளில் உறைபவர் ஆவர். இவர்களின் தொகை சிறிதேறக்குறைய நாலேகாற் கோடியாகும். ங்ஙனம் நாலேகாற்கோடி மக்கட்குரிய ஆங்கிலமொழியானது இப்போது இந்நிலவுலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/232&oldid=1584482" இலிருந்து மீள்விக்கப்பட்டது