உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

209

யெளியவர்களின் உடல்நல மனநலங்களைச் சிறிதேனும் நன்றியுடன் கருதிப்பார்க்கின்றார்களா? இல்லை, இல்லை. அவ்வேழை மக்கட்கு இப்பாழுஞ் செல்வர்கள் அரைவயிற்றுக் கஞ்சிதானும் வார்ப்பதில்லை! அரையிலுடுக்க நான்கு முழத் துண்டு தானுங் கொடுப்பதில்லை! வெயிலுக்கும் மழைக்கும் நச்சுயிர்களுக்கும் ஒதுங்கி இனிது உறைய நல்ல ஒரு சிறு இல்லந்தானும் அமைத்துத் தருவதில்லை! இத்துன்ப நிலை யில் அவர்கள் நோய்கொண்டு வருந்தினால் அது தீர்ப்பதற்கு மருந்தினுதவியுஞ் செய்வதில்லை! அவர் அவ்விடும்பையிற் பெற்ற ஏழைப் பிள்ளைகட்கு உணவோ உடையோ கல்வியோ சிறிதும் ஈவதேயில்லை! அவர்களை அவர் கண்ணேறெடுத்துப் பார்ப்பதுமில்லை! இவை மட்டுமோ! இவ்வேழைக் குடி யானவர் தம் வயிற்றுக்கில்லாமையினாலோ உடல்வலி குன்றினமையினாலோ நோயினாலோ, சிற்சில நாட்களில், ச்செல்வரின் வயல்களிலும் புழக்கடைகளிலும் மாட்டுக் காட்டில்களிலும் அவர் ஏவிய பணி செய்யத் தவறினால், அவர்களை மரத்துடன் சேர்த்துப் பிணித்து, அவரது முதுகில் இரத்தஞ் சொட்டச் சொட்டப் புளிய வளாரினாற் சிறிதும் நெஞ்சிரக்கமின்றி அடித்துக்கொல்கின்றார்கள்! இங்ஙனந் தமிழ்ச் செல்வர்கள் தங்கீழ் வாழ்வாரை ஓவாது துன்புறுத்து வருகையில், நந்தமிழ்மக்கள் உடல்நல மனநலங்கள் வாய்ந்து தமிழ் கல்வியிற் சிறப்பதெங்ஙனம்?

இனி, தங்கீழ் வாழும் பெருந்தொகையினரான ஏழைத் தமிழ் மக்களை அங்ஙனம் மேலேறவொட்டாமல் தமிழ்ச் சல்வர்கள் வன்கண்மை செய்யினுந், தம்மொடு தொடர் பின்றி வாழும் மற்றைக் குடிமக்கட்காவது எந்த வகையி லாயினும் ஏதேனும் உதவி செய்கின்றார்களா? அதுவும் இல்லையே. இந்த நிலைமையில் தமிழ்ப்பயிற்சி பரவுவ தெங்ஙனம்?

இனி, அச்செல்வர்கள், அத்தி பூத்தாற்போல் அங் கொருவர் இங்கொருவராக அருகிக் காணப்படுந் தமிழ் கற்றார்க்காவது, அக்கற்றார் தமது தமிழறிவைப் பலர்க்கும் பயன்படுத்துதற்காவது, அல்லது அவர் இயற்றும் நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/234&oldid=1584484" இலிருந்து மீள்விக்கப்பட்டது