உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

❖ LDMMLDMOшLD -17 →

கட்காவது எந்த வழியிலேனும் எட்டுணையுதவியாவது செய்கின்றார்களா? அதுவும் இல்லையே. இத்தகைய பயனில் செல்வர்கள் உள்ள இந்நாட்டில் தமிழ் கல்வி பரவாதது ஒரு புதுமையா?

இனி, ஆங்கிலரின் சீரிய நிலையைச் சிறிது தேர்ந்து பார்மின்கள்! ஆங்கிலரிற் செல்வராயிருப்பாரெல்லாருந் தமது தாய்மொழியை நன்கு கற்றவர்கள்; அதனால் அவர்கள் கல்வியின் அருமை பெருமையும் அதனைப் பெற்றவர் பெறும் பெரும்பயனும் நன்குணர்ந்தவர்கள்.

“பெற்றவட்கே தெரியும்அந்த வருத்தம் பிள்ளை பெறாப் பேதை அறிவாளோ பேரானந்தம் உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கன்னெஞ்சம் உடையா ராவர்”

என்று தாயுமான அடிகள் அருளிச்செய்தபடி கல்வியை வருந்திப் பெற்றார்க்கே கல்வியின் அருமை தெரியும்! கல்வி யறிவு பெறாத கசடர் அதன் சிறப்பும் பயனும் யாங்ஙனம் அறிவர்? ஆங்கிலரில் அரசர்க்கரசராய்த் திகழும் மாவேந்தர் தந் தாய்மொழியாகிய ஆங்கிலத்தில் மிகுந்த புலமையுடைய ராதலுடன், இலத்தீன், கிரீக்கு, பிரஞ்சு, செர்மன் முதலான அயல் மொழிகளிலும் புலமை வாய்ந்தவர். அம்மாவேந் தரின் கீழ் மன்னர்களாய் உள்ளவர்களும், அவர்க்கு அமைச்சர், படைத்தலைவர், அரசியற்பணி புரிவாராயுள்ள வர்களும், அவரது நாட்டிற் பெருஞ் செல்வர்களாய் உள்ள வர்களும், வாணிக வாழ்க்கையில் வாழ்பவர்களும் எல்லாந் தமதாங்கில மொழியைப் பயின்று தேர்ச்சி பெற்றவர் களாவர். இங்ஙனம் முடிவேந்தர் முதல் வணிகர் ஈறான பெருஞ் செல்வர்களனைவருந் தந் தாய்மொழியாகிய ஆங்கிலத்தை நன்கு பயின்றவர்களாய் இருத்தலாற்,

ம்

6

“கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை

என்னும் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் தம் அருண் மொழிப்படி மக்கட்கு அழியாச் செல்வமாவது கல்வியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/235&oldid=1584485" இலிருந்து மீள்விக்கப்பட்டது