உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

211

யென்று அவர்கள் கடைப்பிடியாய் உணர்ந்து, தங்கள் செல்வத்தையெல்லாங் கல்வி விளக்கத்திற்கென்றே செல வழித்து வருகின்றார்கள். பாருங்கள்! நந்தமிழ் நாட்டில் தமிழ் கற்பித்தற்கென்று இரண்டு மூன்று உயர்ந்த பள்ளிக்கூடங் களைக் காண்பதுதானும் அரிதாயிருக்க ஆங்கிலங் கற்பித் தற்கோ எத்தனை ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களும், உயர்ந்த கல்லூரிகளும், வை தம்மை அகத்தடக்கிய

பல்கலைக் கழகங்களும் இருக்கின்றன! இவைகட்கெல்லாம் எத்தனை கோடிக்கணக்கான பொருள் ஆங்கில அரசின ராலுங் கிறித்து சமயக் குருமார்களாலும் அளவின்றிச் செலவுசெய்யப்பட்டு வருகின்றன!

ங்

இவ்வாறு இத்தமிழ் நாட்டிலும், இவ்விந்திய தேயத்தின் பிறநாடுகளிலும் ஆங்கில மொழிப்பயிற்சிக்கென்று ஆங்கில ராற் சென்ற ஒரு நூற்றாண்டாகச் செலவு செய்யப்பட்டு வருந்தொகையைக் கணக்கெடுக்கப் புகுந்தால் அது கணக்கில் அ ங்குவதாயில்லை. இங்ந ங்ஙனமெல்லாம் ஆங்கிலர் தமது மொழிப்பயிற்சியினை இவ்விந்திய தேய மெங்கும் பரவவைத்து வருதலைப் பார்த்தாயினும், குள்ள செல்வர்களுக்குத் தமிழ்ப்பயிற்சியைப் பரவவைக்க வேண்டுமென்னும் உணர்ச்சியும் முயற்சியும் உண்டாகின் றனவா? சிறிதும் இல்லையே. எங்கோ ஒரு செல்வர், எங்கோ ஒரு குறுநில மன்னர், மன்னர், எங்கோ ஒரு மடத்தலைவர் பள்ளிக் கூடம் வைத்து நடத்த எண்ணங்கொண்டால், அவரும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் வைத்து நடத்துகின்றனரே யன்றித், தனிப்படத் தமிழுக்கென்றொரு பள்ளிக்கூடம் வைத்து அவர் நடத்துதலை யாண்டுங் கண்டிலேம்! ஆங்கிலர் நடாத்தும் பள்ளிக்கூடங்களிலாவது தமிழாசிரியர்க்குத் தக்க சம்பளங் கிடைக்கின்றது, நன்கு மதிப்பிருக்கின்றது. தமிழ்ச்செல்வர் கள் எங்கோ அருமையாய் வைத்து நடத்தும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களிலோ தமிழாசிரியர்க்கு மிகக்குறைந்த

சம்பளந்தான் கிடைக்கின்றது! அதுவல்லாமலும், அப் பள்ளிகளில் தமிழ்கற்பிக்கும் ஆசிரியர்க்கும் நன்கு மதிப்புமில்லை. அதனால், ஆங்கிலக் கல்விக்கழகங்களிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/236&oldid=1584487" இலிருந்து மீள்விக்கப்பட்டது