உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் 17

பயிலும் மாணவர் தமிழை ஊன்றித் திருத்தமாகப் பயின்று புலமையடைவதுமில்லை; தாம் பயிலும் ஆங்கிலத்தையே கருத்தாய்ப் பயின்று, அதிற் பட்டம் பெறுவதற்கு ஒரு சிறு துணையாகவே தமிழைத் தப்புந்தவறுமாய்ச் சேர்த்துப் பயின்று தொலைத்துவிடுகின்றார்கள்! இங்ஙனமாக இத் தமிழ் நாட்டிலும் பிறநாடுகளிலும் ஆங்கிலர் தம்முடைய பெருமுயற்சியானும் பெரும் பொருட் செலவானும் நடாத்தி வரும் பல்லாயிரக்கணக்கான ஆங்கிலக் கல்லூரிகளிற் பயின்று பட்டம் பெற்று வரும் பல்லாயிரக்கணக்கான நம் இந்துதேய மாணவர்கள் ஆ ங்கில மொழியிற்றான் வல்லவர்களே யல்லாமல், தமிழ் முதலான தாய்மொழிகளிற் சிறிதும் வல்லவர்களல்லர். இத்தேயமெங்கும் இவ்வாறு ஆங்கில மொழிக்கல்வி சிறந்து பரவி வருதற்குந், தமிழ் முதலான தாய்மொழிக்கல்வி சிறந்து பரவாமைக்கும், ஆங்கிலரின் நன்முயற்சியும், இந்நாட்டவரின் முயற்சியின்மையுமே முறையே காரணமாதல் தெற்றென விளங்கா நிற்கும்.

னி, ஆங்கிலர் தாங் கைப்பற்றிச் செங்கோலோச்சும் வ்விந்திய நாட்டிலேயே தமது தாய்மொழியாகிய ஆங்கிலத்தைப் பரவவைத்தற்கு இத்துணைப் பெருமுயற்சியும் இத்துணைப் பெரும் பொருட்செலவுஞ் செய்து வருகின்றன ரென்றால், தமது தாய்நாடாகிய பிரித்தானியாவிலுந், தம்மவர் குடியேறி வைகும் வ அமெரிக்கா தென்

ன னமெரிக்கா ஆத்திரேலியா தென்னாப்பிரிக்கா முதலான பெரும் பெருநிலப் பகுதிகளிலுமெல்லாம் அவர்கள் இன்னும் எத்துணை முயற்சியும் எத்துணை கோடிக் கணக்கான பொன்னுஞ் செலவு செய்து தமது ஆங்கில மொழியைப் பரவச் செய்பவராதல் வேண்டும்! அதனாலே தான் இவ்வுலக மெங்கணும் ஆங்கிலமொழி திருத்தமாகப் பயிலவும் பேசவும் எழுதவும் பட்டு வருகின்றது. ஆங்கிலம் நன்கு பயின்று அதில் நூல் எழுதும் ஆசிரியர் தொகையும் அவர் எழுதிய நூற்றொகையுமே கணக்கெடுத்தல் இயலா தென்றால், ஆங்கிலப் பயிற்சி மட்டுஞ் செய்வார் தொகையைக் கணக்கெடுத்தல் இயலுமோ! இவ்வியல்பினை உற்று நோக்குங்கால், ஆங்கிலத்தின்முன் வேறெந்த மொழியுந் தலைதூக்கி நில்லாதென்பது தேற்றமேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/237&oldid=1584488" இலிருந்து மீள்விக்கப்பட்டது