உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

ஆங்கிலமே பொதுமொழியாதற் குரித்து

213

இங்ஙனம் இவ்விந்திய தேயத்தின் மட்டுமேயன்றி இவ் வுலகம் எங்கணும் அழுந்திப் பயிலவும், பேசவும் வழங்கவும் பட்டுவரும் ஆங்கிலமொழி யொன்றே உலக முழுமைக்கும் பொதுமொழியாய்ப் பரவிவருதலால், அது தன்னையே நம் இந்துமக்கள் அனைவரும் பொதுமொழியாய்க் கைக்கொண்டு பயிலுதலும் வழங்குதலுமே அவர்கட்கு எல்லா வகையான நலங்களையுந் தருவனவாகும். முதலில் உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் கடைக்கூட்டுதற்கு எத்தொழிலைச் செய்வதாயிருந்தாலும், அத்தொழில் நுட்பங்களை நன்கறிந்து செய்தற்குதவி செய்யும் பல்லா யிரக்கணக்கான தொழிலறிவு நூல்கள் ஆங்கில மொழி யிலன்றி வேறெதிலேனும் இருக்கின்றனவா? பல்வகைக் கைத்தொழில்களைப் புரியுங்கால், அவற்றிற்கு வேண்டும் பல்வகைப் பண்டங்களைப் பல நாடுகளிலிருந்து வரு வித்தற்கும், அவற்றால் தாஞ்செய்து முடித்த பண்டங்களைப் பல நாடுகளிலும் உய்த்து விலைசெய்து ஊதியம் பெறு தற்கும் ஆங்கில மொழியேயன்றி வேறேதுந் துணைசெய்யுமோ? செய்யாதே. இன்னும் உலகமெங்கணும் நடைபெறும் வாணிகமெல்லாம் ஆங்கில மொழியின் உதவிகொண்டே நன்கு நடைபெறுதலை அறிந்து வைத்தும், அதனைப் பொது மொழியாக வழங்காமல், விரிந்த வாணிக வாழ்க்கைக்கு ஒரு சிறிதும் பயன்படாத இந்தியைப் பொதுமொழி யாக்க முயல்வோர் நம்மனோர்க்கு உண்மையில் உதவி செய்பவர் ஆவரோ? கூர்ந்து பார்மின்கள்!

இனி, அரசியற்றுறையில் நம் இந்துமக்களை முன் னேற்றி வருவதும், தம்முரிமைகளைக் கண்டு கேட்க அவர்கட்குக் கண்திறப்பித்ததும், இவ்விந்திய நாடெங்கணும் பெரும் பொருட்செலவாற் பலகோடி மக்களாற் பயிலப் பட்டு இயற்கையே பொதுமொழியாய்ப் பரவிவருவதும், இலக்கண இலக்கியத் துறைகளிலும் நடு நிலைகுன்றா உண்மைகாண் வகைகளிலும் பன்னூறாயிரக்கணக்கான நூல்கள் புதியபுதியவாய்ப் பெருகும் அறிவுப் பெருஞ் செல்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/238&oldid=1584490" இலிருந்து மீள்விக்கப்பட்டது