உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் என்ற கட்டுரையின் மறுப்புக்கு மறுப்பு

சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் எழுதிய தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்னும் கட்டுரையும், அதன் மீது ஏற்பட்ட மறுப்புக்கு மறுப்பாக குடி அரசு, ஜஸ்டிஸ், ‘தமிழ்நாடு, 'ஊழியன் ஆகிய பத்திரிகைகளில் வந்த வியாசங்களும், தோழர்கள் கைவல்ய சுவாமியார், நீலாவதி யம்மையார் ஆகியவர்கள் எழுதிய வியாசங்களும் சேர்த்துப் பதிப்பிக்கப் பட்டது,

பெரியார் சுயமரியாதை பிரச்சார ஸ்தாபனம்

திருச்சி, 1970.

முன்னுரை

“மறுப்புக்கு மறுப்பு” என்னும் இப்புத்தகத்திற்கு ஒரு மதிப்புரையோ, அறிமுக உரையோ தேவை இல்லை,

66

ஏனெனில், எங்கோ சந்திலோ, பொந்திலோ கவனிப் பாரற்று உறைந்து கிடந்த "தமிழ் நாட்டவரும் மேல் நாட்ட வரும் “ என்ற கட்டுரையானது பள்ளிக் கூடத்துக்குப் பாடமாய் வைத்ததின் காரணமாய் பார்ப்பனர்களின் கண்பட்டு, 'அதைப்படிப்பதால் மக்கள் சமூகத்திற்கே பிரமாதமானதொரு பெருங்கேடு விளையு” மெனக் கூக்குரலிடப்பட்டதின் பயனாய் எவரொருவருடைய மதிப்புரையும், அறிமுக உரையும் ல்லாமல் தமிழ் மக்களில் பெரும்பாலோருடைய கவனத்துக்கு வந்து தீரவேண்டிய நிலையை அடைந்து விட்டது. ஆதலால், அதைப்பற்றி மதிப்புரை எழுதவோ அறிமுகவுரை எழுதவோ நாம் ஆசைப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/242&oldid=1584495" இலிருந்து மீள்விக்கப்பட்டது