உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

  • மறைமலையம் -17

ஒரு சமயம் அதன் ஆசிரியரைப்பற்றி மதிப்புரையோ, அறிமுக உரையோ வேண்டாமா என்பதின் காரணமாய் ஏதாவது எழுதவேண்டாமா என்று பார்த்தாலும், தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்று எழுதிய கட்டுரையின் ஆசிரியரான சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளைப்பற்றி எவ்வித உரையும் அறிமுகமும் எதிர்பார்த்து, அவரை அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் கொண்ட அவ்வளவு பேதை நம் நாட்டில் சிறப்பாக தமிழ் மக்களில் யாருமே இருக்கமாட்டார்கள்.

ஆகவே, அக்கட்டுரை கொண்ட இப்புத்தகத்துக்கு மதிப்புரையோ, அறிமுக உரையே, யாதும் எழுதாமல், அக்கட்டுரையை ஒரு புத்தகமாக பிரசுரிக்கவேண்டிய தவசியம் ஏற்பட்டதைப்பற்றி மாத்திரம் இரண்டொரு வார்த்தை எழுத ஆசைப்படுகின்றோம்.

பிரஸ்தாபக் கட்டுரை கலந்த அறிவுரைக் கொத்து என்னும் புத்தகம் சென்னை சர்வகலாச் சாலை மாணாக்கர் களுக்கு ஒரு பாடப்புத்தகமாக அரசாங்கத்தாரால் வைக்கப் பட்டதை அறிந்த பார்ப்பனர்கள் அதைப் பாடப்புத்தகத் தன்மையில் இருந்து எடுத்துவிட வேண்டுமென்றும் அது மக்களுக்குக்கேட்டை விளைவிக்கக் கூடியது என்னும் பார்ப்பனப் பத்திரிகைகளின் மூலமும் பல இடங்களில் பார்ப்பன மக்களின் முயற்சியைக் கொண்ட "பொதுக் கூட்டங்களின்” மூலமும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அப்புத்தகமும் அக்கட்டுரையும் எப்படிப் பட்டதென்று பார்க்க நேரிட்டதில் எவ்வித சரியான காரணத்தையும் கொண்டு கிளர்ச்சி நடைபெறவில்லை என்றும் வெறும் அசூசையே காரணமாய்க் கொண்டு கிளர்ச்சி நடக்கிற தென்றும் உணர்ந்து அக்கிளர்ச்சிக்கு எதிர்க்கிளர்ச்சி செய்யப்பட்டது.

அக்கிளர்ச்சிக்கு ஆக பார்ப்பனர்கள் அப்புத்தகத்தைப் பற்றி எழுதி வந்த மறுப்புக்களுக்கு மறுப்புகள் எழுதி ஒருவாறு அக்கிளர்ச்சியை ஒடுக்க வேண்டியதாயிற்று.

ஆகவே இந்நிலையில் அறிவுரைக் கொத்துக்கு மறுப்பாக பார்ப்பனர்களால் பத்திரிகைகளில் எழுதி வந்தவை களுக்கு, மறுப்பாக பார்ப்பனரல்லாதார்கள் பத்திரிகைகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/243&oldid=1584496" இலிருந்து மீள்விக்கப்பட்டது