உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

233

அவர்களை வெட்டிச் சாய்க்கின்றார்களே! இவர்கள் தாமா ஒரு நாட்டவர்! இவர்கள் தாமா அருளொழுக்கத்திற் சிறந்த வராக நூல்களிற் புலனாகுஞ் சைவ வைணவ சமயாசிரியர் மரபில் வந்தவர்கள்! இத்தமிழ் நாட்டில் இவ் ஒருசில இனத் தார்க்குள்ள இறுமாப்பும் மனக்காழ்ப்புங் கொடுமையும் வேறெங்கேனும் இருக்கக் கண்டதுண்டோ? இத்தகையவர்கள் கையிற் பொருள் மிகுதியாய்ச் சேர்வது எதற்கு? அவர்களின் கொழுப்பையுங் காழ்ப்பையுங் கொடுமையையும் மிகுதிப் படுத்துதற்கன்றோ? இக்கொடியவர்கள் கையைவிட்டு நீங்கி அப்பொருள் மேல்நாட்டவர் கையை அடைந்தால் அதனால் உலகிற்கு நன்மையே விளையுமல்லது தீமை சிறிது முண்டாகா தென்பது நன்குப்புலனாகவில்லையா?

.

எத்தனைக்

இனிச் சமயக் கல்வியேயல்லாமற் பிறகல்வித்துறை களிலும் மேல்நாட்டர் தமது பொருளை கோடிக்கணக்காய்ச் செலவு செய்கின்றார்கனென்பதைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! மேல் நாட்டவர் இத்தமிழ்நாட்டில் வருவதற்குமுன் இங்கே உயர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றாயினும் இருந்ததா? திண்ணைப் பள்ளிக்கூடங்கள் சிலவே எங்கோ சில இடங்களில் வயிற்றுப் பிழைப்புக்கு இல்லா வாத்தியாயர் களால் நடத்தப்பட்டன; அவ்வாத்தியாயர்களிற் பெரும் பாலருந் தமிழ் நன்கு கற்றறியாதவர். ஒரு சிறுவன் தமிழ் எழுத்துக்கள் எழுதப்படிக்கத் தெரிந்துகொள்ளுவதற்கே நாலைந்தாண்டுகள் செல்லலாம். அக்காலத்தில் அச்சுப் புத்தகங்களே இல்லாமையால், உயர்ந்த தமிழ் நூல்களை எளிதிற்பெற்றுப் பயில்வதற்கே இடமில்லாமல் போயிற்று, இவ்வொட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடங்களிலுந், தாழ்ந்த குலத்தவராக எண்ணப்படுவோர் சேர்ந்து படித்தல் இயலாது. அஞ்ஞான்றிருந்த தமிழ்ப் புலவர் சிலரும் பொருள் வருவாய்க்கு வழியில்லாமையாற் செல்வர் சிலரையடுத்து, அவரைப் பல வகையரலெல்லாம் புகழ்ந்துபாடிக் காலங்கழித்து வந்தார்கள். இவ்விரங்கத்தக்க நிலை இப்போதும் முற்றுமொழிந்து போயிற்யென்று சொல்லுதல் கூடாது.

ஆனாலும், மேல்நாட்டவர் இந்நாட்டுக்கு வந்தபின் தமிழ் மக்கட்கும் பிறர்க்கும் விளைந்திருக்குங் கல்வி நலங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/258&oldid=1584513" இலிருந்து மீள்விக்கப்பட்டது