உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

235

தம்மைத்தாமே உயர்த்திச் சொல்லிக்கொள்ளும் மக்கட் போலிகள் எத்தகைய கைம்மாறு செய்கிறார்கள்! பார்த்தீர் களா? அருளிரக்கமுடையார் சிலர் இம்மக்கட் போலிகளைப் பார்த்து, “உங்களுக்கு நன்மையே செய்யும் இவ்வேழைகளை ஏன் இங்ஙனம் வருத்துகின்றீர்கள்?” என்று கேட்டால், ஊரார் எவர்க்குந் தெரியாத வடமொழியிற் பார்ப்பனர் தமது நன்மையையே கோரி, மற்றைப் பிறரையெல்லாம் இழித்து, அவர்க்குத் தீது செய்யுந் தீய எண்ணத்தோடு எழுதி வைத்திருக் குங் கொடிய மிருதி நூற் கட்டளைகளையெல்லாம் எடுத்து வந்து முழ நீளங்காட்டி, "கடவுளே வேதத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார், அப்படிச் சொல்லியிருக்கிறார், அவரவர் முற்பிறவியில் செய்த வினைப்படிதானே இப்பிறவியில் மேற்குல கீழ்க்குலங்களிற் பிறந்து துன்புறவேண்டும்! அதற்குநாம் என்ன செய்யலாம்!” என்று எளிதாகச் சொல்லி ஏமாற்றி விடுகின்றார் கள். “வடமொழி நூல்கள் நமக்கு உரியவைகள் அல்ல, நமக்குரிய எந்தப் பழைய தமிழ் நூல்களிலாவது இத்தகைய கொடுமையை நம்போன்ற மக்கட்குச் செய்யும்படி ஏதேனுஞ் சொல்லி யிருக்கின்றதோ? சைவ சமயாசிரியர்களெல்லாருஞ் சாதி வேற்றுமை சிறிதும் பாராது நடந்தும் பாடியும் இருக்கின்றனரே; நம் ஆசிரியர் செய்தபடியுஞ் சொல்லியபடியு மல்லவா நாம் நடத்தல் வேண்டும்?" என்று அருளாளர் கேட்டால், “அவையெல்லாம் 'பக்தி மார்க்கத்'தில் உள்ளார்க்குத் தகுங் ‘கர்ம மார்க்கத்'திலுள்ள நமக்கு அவை தகா என்கிறார்கள். அதன்மேல் "பக்திமார்க்கம் உயர்ந்ததா தாழ்ந்ததா? அன்புநெறியைப் பரப்பிய நம் சமயாசிரியர் கடைபிடித்து ஒழுகிய முறைப்படி நாம் நடப்பதுநன்றா? தீதா?” என்று வினவினால், அச்சாதி வெறிபிடித்த போலிகள் "சமயாசிரியர் எய்திய நிலை வரும்வரைக்கும் நாம் அவர்போல் நடத்தல் தீதாகும்” என்று விடை கூறுகின்றனர். அதுகேட்டு மீண்டும் அவ்வருட்மையினாலும், அன்பு அருள் இன்மையால் வரும் வன்செல்வர் “ஒற்றுமையின்மையால் வரும் பகைமை பொறானெஞ்ச இறுமாப்பினாலும் பற்றப் பட்டிருக்கும் வரையில் மக்கள் சமயாசிரியர் நிலையினை யெய்தல் யாங்ஙனங் கைகூடும்?” என்று கேட்பின், அதற்கவர் விடைகூற மாட்டாமல் மெல்ல எழுந்து நழுவிப்போய் விடுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/260&oldid=1584515" இலிருந்து மீள்விக்கப்பட்டது