உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் -17

உண்மையான் நோக்குங்காற் சாதி வெறியர்க்குத் தம் முடம்போடு அழிந்தொழியுஞ் சாதி தான் பெரி பரிதாகக் காணப்படுகின்றதே யன்றி, உடம்பழியினுந்தான் அழியாதாய்த் தம்முயிரோடு உடன்வருஞ் சமயவறிவு பெரிதாகக் காணப்பட வில்லை. தம் சமயாசிரியர் வழி நடவாத இவர்கள் தம்மைச் ‘சைவர்’ என்று உயர்த்துப் பேசிக்கொள்வதும், அவர் அருளிச் செய்த திருப்பதிகங்களை ஓதுவதும், அவரைப் பாராட்டிப் பேசுவதும் நகைப்புக்கே யிடமாயிருக்கின்றன.

யி

தமது சமயத்தினுந் தஞ்சாதியையே அவர்கள் மேலதாய்க் கருதுகின்றனர் என்பதற்கு அவர்கள் தஞ்சமயத்தவரல்லாத வைணவர் சிலர் தமக்கு உறவினராதல் பற்றி அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்தலே சான்றாகும். தம்முடைய சைவ வைணவ சமயந் துறந்து கிறித்துவ சமயம் புகுவாருஞ், சாதிவேற்றுமைக்கு எள்ளளவும் இடம் இல்லாத அக் கிறித்துவ சமயம் புகுந்த பின்னருந் தமது பாழ்த்த சாதி வேற்றுமையினை விடாப்பிடியாய்ப் பற்றிக்கொண்டு தாம் இறைவனைத் தொழச் சல்லுந் திருக்கோயில்களிலுங் கலகம் விளைக்கின் ரென்றாற் சாதியிறுமாப்பின் கொடுமையை என்னென்றெடுத் துரைப்போம்! திருக்கோயில்களிலுஞ் சாதி வேற்றுமை பாராட்டி, ஈரநெஞ்சமின்றி ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கக் கங்கணங் கட்டி முனைந்து நிற்கும் இவர்கள் தாமா ஆங்கில அரசை நீக்கித் தாமாக அரசாள வல்லவர்கள்?

இங்ஙனந் தமக்குரிய சமய அறிவையுஞ், சமயாசிரியரை யுஞ், சமய நூல்களையுஞ், சமய வொழுக்கங்களையும் பெரிதாகக் கருதாமற், றாம்பிறந்த சாதியையே அவையெல்லாவற்றினும் பெரிதாகக் கருதி நடக்குந் தமிழர்கள். தமக்குரிய தமிழ் மொழியிலாயினும் உணர்ச்சி வாய்ந்தவர்களாய் இருக்கின்றார் களோவெனின் அப்படியும் இல்லை. தமிழர் பத்தாயிரம் பேரில் ஒருவர் இருவர்க்கே சிறிது எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரியும்; தமிழறிவு செவ்வையாக வாய்த்தவர்களைத்தேடப் புகுந்தால், நூறாயிரவர்க்கு ஒருவர் இருவருமே காணப்படுவர். இங்ஙனம் மிக அரியராயக் காணப்படுந் தமிழ் கற்றாரிற் பெரும் பாலார்க்குள்ள அறிவு நிலையாவது, தமிழ் கல்லாத ஏனை யோர்க்கு உள்ள அறிவு நிலையினுஞ் சிறந்ததாகக் காணப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/261&oldid=1584516" இலிருந்து மீள்விக்கப்பட்டது