உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மறுப்புக்கு மறுப்பு

237

கின்றதோவென்றால், அப்படியும் இல்லை. கல்லாதவர்க்குள்ள சாதி யிறுமாப்பும் மடமைக் கொள்கைகளுங் கற்றவரையும் விட்டு நீங்கியபாடில்லை. கற்றவருங் கல்லாதார்க்கிணங்கி அவர் வழிச்செல்லக் காண்கின்றோமே யன்றிக், கற்றவர் தாங்கற்ற கல்வியறியவாற் கல்லாதாரைத் திருத்தி அவரைத் தம் வழிப்படுக்கக் காண்கின்றோம் இல்லை.

தமது தனிச் செந்தமிழ் மொழியில் அன்பு அறிவு அருளொழுக்கங்களை விரிக்கும் நூல்களும், அரசர்கள் அடியார்கள், கற்றவர்களின் உண்மை வரலாறுகளைத் தெரிவிக்கும் பாட்டுகள் காப்பியங்களும், இறைவனைக் கண்டு அவனைக் குழைந்து குழைந்து உருகிப்பாடிய சமயாசிரியர் தந்திருப்பதிகங்களும் நிரம்பிக்கிடக்க, அவற்றின் அருமை யறியாமல், தமிழ்நூல் நலத்திற் றினையளவும் வாயாது பொய்யும் புரட்டுங் கொலை புலை, கட்குடியும் மலிந்த ஆரிய நூல்களைத் தாம் சிறிதும் ஆய்ந்து பாராதிருந்தும், அவற்றை ‘வேதம்’, ‘மிருதி’, ‘இதிகாசம்’, ‘புராணம்' என்று உயர்த்துப் பேசி அவை தம்மை இறைவன் அருளிச் செய்தனவாகப் பாராட்டித் தாம் கற்ற தமிழையுந் தமிழ் நூல்களையும் இழித்துப் பேசுந் தமிழ்ப் புலவரின் அறிவு நிலை எத்தகையதென்பதை எண்ணிப் பாருங்கள்!

தாம் கற்ற வடநூற்கல்வி உலகினர்க்குப் பயன்படா தென்பதை நன்குணர்ந்திருந்துந், தாம் கல்லாத தமிழ் மொழிக் கல்வியே இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெரிது பயன்படு மென்பதை நெஞ்சாரத் தெரிந்திருந்துந், தாம் பயின்ற இருக்கு முதலான ஆரிய நூல்களிற் பல்வேறு சிறு தெய்வ வணக்கமும், மக்களின் நல்லொழுக்கத்துறைகட்கு ஆகாதனவும், வெறும் பொய்க்கதைகளும் நிறைந்திருத்தல் செவ்வனே அறிந்திருந்துந், தாம் பயிலாத தொல்காப்பியம்', 'சங்க இலக்கியம்’, 'திருக்குறள்’, 'சிலப்பதிகாரம்', 'தேவாரதிருவாசகம்’, ‘பெரிய புராணம்’, சிவஞான போதம்' முதலான அருந்தமிழ் நூல்களில் ஒரு முழுமுதற் கடவுள் வணக்கமும் மக்களின் நல்லொழுக்கத் துறைகட்கு இன்றியமையாது வேண்டுவனவும் உயர்ந்த உண்மை வரலாறுகளும் நிரம்பி விளங்கல் கேட்டிருந்துந், தாம் தமக்குரியதாகக் கருதியிருக்கும் வடநூல்களையே தெய்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/262&oldid=1584517" இலிருந்து மீள்விக்கப்பட்டது