உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் -17

நூல்களாக உயர்த்திப்பேசித், தமக்குப் புறம்பாகத் தாம் கருதி யிருக்குந் தமிழ் நூல்களையெல்லாம் மக்களிலுந் தாழ்ந்தவர்க் குரியவாக இழித்துப்பேசி இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் நிற்கும் ஆரிய மாந்தர் தம் அறிவு நிலை எத்தகைய தென்பதையும் எண்ணிப்பாருங்கள்!

இவ்வாறாக இத்தமிழ் நாட்டிலுள்ள கற்றவர்கள் நிலையும் நடுவு நிலை திறம்பியதாய், உண்மையை உள்ளபடி ஆராய்ந்துரைத்து மக்களை உண்மையறிவில் மேலெழச் செய்தலிற் சிறிதும் விருப்பு இல்லாமல் அவர் தன் முன்னேற்றத் திற்குப் பேரிடர் பயப்பதுமாயிருத்தலை ஆழ்ந்து நினைய வல்லார்க்கு இந்நாட்டவரும் இவரிற் பலவகையில் வேறுபடாத வடநாட்டவரும் ஒழுங்கு குழுமித் தாமே தமது நாட்டை அரசுபுரிதல் கனவிலுங் கைகூடாதென்பது நன்கு விளங்கா நிற்கும். இஃதிவ்வா றிருக்க.

இனி,

னி, மேல்நாட்டவரிற் கற்றாரின் அறிவு நிலையினைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! அவர்கள் தாம் பெற்ற செல்வ மெல்லாந் தமது கல்விப் பயிற்சிக்கே பயன்படுமாறு செய்து தமது ஆங்கில மொழியை மிகத்திருத்தமாகவுந் தீஞ்சுவை யுடையதாகவும் வழங்கி, அதன் கண் எல்லா வகையான கலை நூல்களையும் ஆழ்ந்தாராய்ந்து தெளிந்த அறிவான் நாளு நாளும் இயற்றி உலகமெங்கணுந் தமது மொழிப்பயிற்சியை ஒளிரச்செய்து வருகின்றார்கள். அதுமட்டுமோ! அவர்கள் அயல்நாட்டு மொழிகளையும் நன்கு பயின்று, அவற்றின் கண் உள்ள அரிய பெரிய நூல்களையுந் தமது ஆங்கில மொழியில் திருப்பி, அவற்றின் உண்மைகளையும் நடுநிலை வழாது எடுத்துக்காட்டி, அவைகளும் இவ்வுலகெங்கும் பரவிப் பயன்றருமாறு செய்கின்றார்கள். மற்று, நம் இந்தியநாட்டு மக்கட் வகுப்பினரோ தாந்தாம் வழங்கும் மொழியையன்றித் தம்மிற் பிற வகுப்பினர் வழங்கும் மொழியையும் அதன்கண் உள்ள நூல்களையுங் கற்பதில் வேட்கை சிறிது மில்லாராய் நிற்கும் அளவிலமையாது, அவற்றையும், அவற்றை வழங்கி வருவாரையும் இழித்துப் பேசியும் வாளா மாய்கின்றனர்!

இன்னும், மேல்நாட்டவர் தமக்குரிய கிறித்துவ சமய உணர்ச்சியை இவ்வுலகமெங்கணும் பரவச்செய்தற்குத் தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/263&oldid=1584518" இலிருந்து மீள்விக்கப்பட்டது