உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

239

பொருளிற் பெரும் பகுதியைக் செலவிட்டு வருகின்றனரே யல்லாமல், தமது சமயவுணர்ச்சியை ஒரு கருவியாகக்கொண்டு செல்வப்பொருளை அவர்கள் தேடித் தொகுத்தல் கண்டிலேம். மற்று இந்நாட்டின் கண் உள்ள குருக்கள்மாரோ இந்து சமயப்பெயரால் அளவிறந்த கிரியைகள் சடங்குகளை வகுத்து வைத்து, அவற்றின் வாயிலாகச் செல்வர்கள், சிற்றரசர்கள், அரசர்களின் செல்வமெல்லாங் கவர்ந்து வருதலுடன், ஏழைக் குடிமக்கட்குரிய சிறு பொருளையுமுரிஞ்சி அவர்களையும் வறுமைக்கு இரையாக்கி வருகிறார்கள்.

ஒருவன் பிறந்தது முதல் அவன் இறக்குமளவும், அவனும் அவனுக்குரியாருங் கடன் பட்டாயினுஞ் செய்து தீர்த்து விடும் படியாக அவர்கள் கட்டி வைத்திருக்குங் கிரியைகளையுஞ், சடங்குகளையும், அவற்றிற்காகச் செலவாகும் பொருட் டிரளையுங் கணக்கிட்டுப் பாருங்கள்! ஒருவன் செத்த வுடனாவது இக்கிரியைகள் ஒழிகின்றனவா? இல்லை, இல்லை. அவன் செத்த பத்தாம் நாளிலுங் கிரியை, ஒவ் வொரு திங்களிலும் மறை நிலா நாளிலுங் கிரியை, ஒவ்வோராண்டிலும் அவன் இறந்த நாளிலுங் கிரியை. இங்ஙனங்கருவாய் வயிற்றி லிருக்கும்போதும், மகவாய்ப் பிறந்து அறை கழிக்கும்போதும், ஆடையுடுக்கும்போதும், காது குத்தும்போதும், பள்ளிக் கூடத்திற் புகும்போதும், மணஞ் செய்யும்போதும், மனைவி யுடன் கூடும்போதும், அறுபதாமாண்டு நிறையும்போதும், இறந்தபோதும், இறந்தபின்னருந் தொடர்பான செலவிற் கிரியைகளைச் செய்து செய்து நம் தமிழ்மக்கள் வறுமையிற் கிடந்துழலுமாறு புரிந்து, அவர்தரும் பொருளாற் கொழுக்கத் தின்று இன்புற்றிரக்கமிலராய் வாழும் ஆரியக் குருக்கள்மார் தஞ் சூழ்ச்சியை எண்ணிப் பார்ப்போர் எவரேனும் உளரா?

இங்ஙனந் தொடர்பாகக் கிரியைகளைப் பற்றுமாறு கற்பித்து, அவற்றைத் தமிழர்கள் தாமே செய்யாமல் ஆரியராகிய தம்மைக்கொண்டே செய்வித்தல் வேண்டுமெனவும் வற்புறுத்தி, அவற்றால் தமிழர்கள் பொருளைப் பகற்கொள்ளை கொண்டு னிது வாழும் ஆரியக் குருக்கள், தாம் தமிழர் இல்லங்களில் அங்ஙனந் தொடர்பாகச் செய்துவைக்குங் கிரியைகளை அவர்க்கு விளங்கும்படியான தமிழ் மொழியிலாவது செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/264&oldid=1584519" இலிருந்து மீள்விக்கப்பட்டது