உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

240

❖ LDMM LDMOED -17 →

வைக்கிறார்களா? அதுவும் இல்லை; தமிழர்க்கு எள்ளளவுந் தெரியாத ஆரிய மொழிச் சொற்களை 'மந்திரங்கள்' என உயர்த்தி ஏமாற்றிச் சொல்லி, அக்கிரியைகளைச் செய்பவர் களாய், அவர்களைப் பாவைபோல் ஆட்டிவைக்கின்றார்கள். கடவுளைக் கண்டு பாடிய மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் முதலான தெய்வ ஆசிரியர்கள் அருளிச்செய்த தெய்வச் செந்தமிழ்த் திருப்பதிகங்களாந் தெய்வ மாமறை மந்திரங்கள் இருக்க, அவற்றை இழித்து ஒதுக்கி, இந்நாட்டவர்க்குத் தெரியாத வடமொழிச் சொற்களைச் சொல்லி அக்கிரியை களைச் செய்யும் ஆரியக்குருமாரின் தீய எண்ணத்தைக் கண்டுணர்ந்து, அதனைப் பலரறியத் தெரிவிக்கும் அறிவாண்மை வாய்ந்தார் இத்தமிழரில் இல்லையே!

இன்னுஞ், சிவபிரான் திருக்கோயில்களில் வழிபாடு ஆற்றுங் குருக்கள்மார் தமிழரினத்தைச் சேர்ந்தவராயிருந்தும், அத்திருக் கோயில்களுக்கு வந்த சிறப்பெல்லாம் அவைகள் சைவ சமயாசிரியராற் பாடப்பெற்றிருப்பது பற்றியே யென்பதை அவர்கள் நன்குணர்ந்திருந்தும், அவர்கள் தேவார திருவாசகச் செந்தமிழ் மந்திரங்களைக்கொண்டு இறைவனுக்கு வழிபாடு செய்யாமல் தமிழ் மக்களுக்குச் சிறிதும் புலனாகாத வடமொழிச் சொற்களை மந்திரங்களென உயர்த்துச்சொல்லி அவற்றைக் கொண்டே கோயில் வழிபாடு செய்கின்றார்கள். ஈதென்ன கொடுமை பாருங்கள்!

முழுதுஞ்

தமிழ்மொழி வழங்கும் இத்தென்னாட்டில் தமிழ் அரசர்களாலுந், தமிழர்களாலும் அமைக்கப்பட்டுச் சைவ சமயாசிரியர்களால் தமிழ் மொழியிலேயே சிறப்பித்துப் பாடப்பெற்ற திருக்கோயில்களிலேயே தமிழ் மந்திரங்களை வழங்காமற்செய்து, இத்தமிழ் நாட்டுக்கும், இங்கு வணங்கப் படுஞ் சிவபிரானுக்கும் அவனை வணங்குந் தமிழ் மக்களுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லாத, அவர்களுக்குச் சிறிதுந் தெரியாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து அவற்றைக் கொண்டே அத்திருக்கோயில்களில் எல்லா வழிபாடும் நடக்கும்படி செய்துவிட்ட பார்ப்பனர்தஞ் சூழ்ச்சியையும், அஞ்சாநெஞ்சையும், ஆண்மையையும் எண்ணிப் பாருங்கள்! இத்தமிழ்நாட்டின் கண் எத்தனையோ கோடிக்கணக்கான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/265&oldid=1584520" இலிருந்து மீள்விக்கப்பட்டது