உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறுப்புக்கு மறுப்பு

241

தமிழ் மக்களும், நூறாயிரக்கணக்கான செல்வர்களும், ஆயிரக்கணக்கான சிற்றரசர்களும் நூற்றுக் கணக்கான மடாதிபதிகளுந் தமிழ்ப் புலவர்களும் நிறைந்திருந்துந் தமிழர்களாகிய எங்களுக்குரிய இத்திருக்கோயில்களில் தேவார திருவாசகச் செந்தமிழ் மா மந்திரங்களைக்கொண்டு வழிபாடு செய்யாமல், எங்களுக்குப் புறம்பான எங்களுக்குத் தெரியாத வடமொழியைக்கொண்டு ஏன் வழிபாடு செய்கின்றீர்கள்?' என்று கேட்ட ஆண்மையுடையவர் எவராவது நம் தமிழரில் உண்டா? இத்துனைப் பெரிய இத்தமிழ்நாட்டில், எத்தனையோ கோடிக்கணக்கான தமிழ் மக்கள் நிறைந்த இத்தென்னாட்டில், எல்லாம் வல்ல றைவனை நேர்முகமாய்க் கண்டு திருப்பதிகங்கள் அருளிச்செய்த ஆசிரியர் நிலவிய இத்தெய்வ நாட்டில், எல்லா இடங்களிலுஞ் சிறந்ததான தூயதான தெய்வம் உறைவதான திருக்கோயிலிலேயே நம் தெய்வ ஆசிரியர் அருளிய தமிழ் மந்திரங்கள் நிலவாமல் அவற்றைப் புறந்தள்ளித், தெய்வத் தன்மை சிறிதுங் காணப் படாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து நுழைத்து, அவற்றைப் பெருமைப்படுத்தித் தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறை களைச் ‘சூத்திரப்பாட்டு' என்று இழித்துப்பேசும் பார்ப்பனர் கள், எந்தக்காலத்திலாயினும் இந்நாட்டுக்குக் குடியரசு வருவதா யிருந்தால், அதன்கண்ணுந் தமக்கு ஆட்சியையும், ஆக்கத் தையும் நிலைப்படுத்தி, ஏனை மக்களையெல்லாம் அறிவில்லாத குருடர்களாக்கித் தமக்கு அடிமைப்படுத்தி வைத்திருப்ப ரேயல்லாமல், அவர்கட்கு ஏதொரு சிறிய உரிமை யேனுங் கொடுப்பர் அல்லது கொடுக்க விரும்புவர் என்று கனவிலும் நினைக்கின்றீர்களா; நினையாதீர்கள்!

நமக்கு உயிரினுஞ் சிறந்த திருக்கோயில் முதல் அரசியல் நிலைகள் கல்விக் கழகங்கள் கைத்தொழிற்சாலைகள் புகை வண்டி நிலையங்கள் உணவு விடுதிகள் மணக்களங்கள் பிணக் களங்கள் ஈறான எல்லா இடங்களிலும் ஆரியப் பார்ப்பனர்களே ஆட்சியுந் தலைமையும் உடையவர்களாயிருந்து, ஏனை வகுப்பினரின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை விளைவிப்பவர் களாய் இருக்கின்றார்கள்.

ஏனை வகுப்பினர் எல்லாரும் ஒன்றுசேர்ந்து விடாதபடி, அவர்கட்குட் பல்வேறு சமயப்பிரிவு சாதிப்பிரிவுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/266&oldid=1584521" இலிருந்து மீள்விக்கப்பட்டது