உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் 17

யுண்டாக்கி அவ்வொவ்வொரு பிரிவினருந் தத்தஞ் சமயமே, தத்தஞ் சாதியேயுயர்ந்ததென்று சொல்லி ஒருவரையொருவர் பகைத்துப் போராடவைத்து, அப்போராட்டத்திற்கு இடமாக இராமன்கதை, கண்ணன் கதை, கந்தன் கதை, விநாயகன் கதை, காளிகதை முதலிய பலவேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை இராமாயணம் பாரதம் பாகவதம் காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி அவை, தம்மை மற்றையெல்லா வகுப்பினருங் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய்ப் பிடித்துக்கொள்ளும்படி செய்து விட்டார்கள்.

66

தமிழரில் ஆராய்ச்சியறியவுடையார் எவரேனுந் தமிழ் மக்கள் இங்ஙனங் குருட்டு நம்பிக்கையால் அழிந்து போவதைக் கண்டு இரங்கி, ப்பார்ப்பனக் கட்டான கதைகளை நம்பவேண்டாம். அறிவு விளக்கத்திற்குந், தூய ஒழுக்கத்திற்கும் உதவி செய்யும் உயர்ந்த தமிழ் நூல்களை ஆராய்ந்து பயிலுங்கள்! குலமும் ஒன்றே, குடியுமொன்றே, வழிபடு தெய்வமும் ஒன்றே” என்று பொதுமக்கட்கு அறிவு தெருட் முன்வருவாராயின் உடனே அப்பார்ப்பனரெல்லாரும் ஒரே முகமாய் நின்று அவரை ‘நாத்திகர்’ ‘பிராமண நிந்தகர்’ ‘வேத நிந்தகர்' என்று பலரறியத்தூற்றி, அவரது அறிவுரை எவரது செவியிலும் ஏறாமற் செய்வதுடன், அவரது வாழ்க்கைக்கும் பலவழியில் தீங்கிழைக்கின்றார்கள்.

மற்றை வகுப்பினரிற் செல்வமுடையவர்கள் எவர் இருப்பினும் அவரைப் பார்ப்பனர்கள் சூழ்ந்துகொண்டு, அவரது பொருளைப் பல வகையில் உரிஞ்சி விடுவதோடு. தமிழறிஞர்கள் அறிவுரை அச்செல்வர்களின் செவியுள் நுழை யாதபடிக்கும் மிக விழிப்பாக இருந்து தடை புரிந்து விடுகின்றார்கள். அதனால்; இத்தமிழ் நாட்டிலுள்ள செல்வர் களின் பெரும் பொருள் தமிழ் மக்களின் அறிவு விளக்கத்திற்கும், அவர் தம் நல் வாழ்க்கைக்குஞ் சிறிதும் பயன்படாமற் போகின்றது!

ஊர்கடோறும் நகரங்கடோறும் இராமாயணம்' முதலானக் கட்டுக்கதைப் 'பிரசங்கம்' நடைபெறச்செய்து அதன் வாயிலாக ஊரவர் பொருளை எளிதிற் கவர்ந்துகொள்வதுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/267&oldid=1584522" இலிருந்து மீள்விக்கப்பட்டது