உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

முதற்பதிப்பின் முகவுரை

கற்றார் கல்லாதார் என்னும் இரு திறத்தார்க்கும் பயன்படும் பொருட்டுச், சென்ற பல ஆண்டுகளாக யாம் இடையிடையே வெளியிட்டு வந்த துண்டுத் தாள்களிற் போந்த கட்டுரைகளே பெரும்பாலும் இந்நூலிலே தொகுக்கப்பட் டிருக்கின்றன. அவை: 'சைவ சமயப் பாதுகாப்பு’, திருக்கோயில் வழிபாடு’, ‘சிறு தேவதைகட்கு உயிர்ப்பலி யிடலாமா?”, ‘சீவ காருணியம்’, 'தமிழ்த்தாய்', 'அறிவுநூற் கல்வி’, ‘உடன்பிறந்தார் ஒற்றுமை', 'கூட்டு கூட்டு வாணிகம்', வாணிகம்', ‘பெண் மக்கள் கடமை’ என்பனவாகும். இவை இவை பல்லாயிரக்கணக்கான துண்டுத் தாள்களில் அச்சிடப்பட்டுத் தமிழ் வழங்கும் நாடுகள் எல்லா வற்றிலும் விலையின்றி வழங்கப்பட்டன. இவற்றைப் பதிப்பிட்ட போது இவற்றின் அச்சுக்கூலி கடிதக்கூலிகளை மட்டும் ஆங்காங்கு உள்ள நண்பர்கள் சிற்சிலர் ஏற்றுக்கொண்டனர்.

இனித், துண்டுத் தாள்களாக அல்லாமல், எமது ஞானசாகர இதழில் யாம் இடையிடையே எழுதி வெளியிட்ட வேறு சில கட்டுரைகளும் இந்நூலின் கண் ஊடே ஊடே சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை: 'கடவுளுக்கு அருளுருவம் உண்டு’, ‘கல்வியே அழியாச் செல்வம்’, தமிழிற் பிறமொழிக் கலப்பு', ‘பெற்றோர் கடமை' என்பனவாகும். இவற்றுட் கல்வியே அழியாச் செல்வம்' என்பதும், 'பெற்றோர் கடமை' என்பதும் எம் அருமைத் திருமகள் நீலாம்பாள் அம்மை அவைக்களத்தில் விரிவுரை நிகழ்த்தும் பொருட்டு எழுதப்பட்டனவாகும்.

இந்நூலின்கண் அடங்கிய பதின்மூன்று கட்டுரைகளுந் தூய தனித்தமிழில் எழுதப்பட்டிருத்தலோடு, எல்லாரும் நடையிலும்

எளிதிற்

கற்றுணரத்தக்க

எளிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/28&oldid=1584228" இலிருந்து மீள்விக்கப்பட்டது