உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

273

ர்

களால் இளைஞர்கள் நெறி தவறியிருக்கின்றனர். “ஹிந்து” பத்திரிகை நேசிக்கும் புராதனக் காவியங்களின் பக்கங்களில் மர்மமான விஷயங்களையும், குறிப்பிட்ட வருணத்தார் தெய்வீகமானவர்களென்றும், ஆகவே இதர வருணத்தவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருப் பதையும், தாழ்ந்த வகுப்பார் பாவிகளென்று இழிவுபடுத்தப் பெற்றிருப்பதையும், குறிப்பிட்ட வருணத்தாருக்கு தானம் கொடுத்தால் மோட்சமுண்டென்ற விஷயத்தையும், தற்கால சந்ததியார் வெறுக்கும் இதர பல விஷயங்களையும் தற்காலத் திற்கு பொருத்த மல்லாத நீதிகளையும் மிகுதியாகக் காணலாம். இவ்விஷயங்களை விவரித்துக் கூறவேண்டுவது அனாவசிய மாகும். இம்மாகாணத்தில் இந்நாட்டு பாஷையிலுள்ள ஒரு பாடப் புத்தகத்தை பார்த்தவருக்கு “ஹிந்து” பத்திரிகையின் பரீட்சைப்படி புராதன புத்தகங்கள் மிக்க ஆட்சேபகரமானவை யென்பது நன்கு புலனாகும். நேர்மையைக் கருதும்பட்சத்திலும், சிறுவர் சிறுமிகள் மனதில் பட்சபாதபமற்ற அபிப்பிராயம் ஏற்பட ஆவல் கொள்ளும் பட்சத்திலும் நம்மிடமுள்ள பெரும் பான்மையான புத்தகங்களைப் புதிதாக எழுதியே பாடப் புத்தகங்களாக உபயோகிக்க வேண்டுமென்ற முடிவுக்கு வர வேண்டும்.

வெளிப்பட்ட குணங்கள்

புரோகித சமூகத்தாரை ஸ்துதி செய்வதும், இதர சமூகங் களை இழிவு படுத்துவதும், இத்தேசத்தில் புரோகித சமூகத் தாரே மோட்ச வாசலை திறக்கத் திறவுகோல் உடையவர் களென்றும், பிராமணரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதால் மட்டுமே விமோசனமடையலாமென்றும் பிராமணரல்லா தாருக்கு அறிவுறுத்தும் இளைஞர்கள் “மனோவெழுச்சியும் ஒழுக்கமும் பெறுவதற்கு” போதிக்க வேண்டிய கல்வியென்று ‘ஹிந்து” பத்திரிகை அபிப்பிராயப் படுகிறதா? இந்தப் புத்தகம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டதால் நமது தேச மக்களில் ஒரு பிரிவினரின் மிக்க மோசமான குணங்கள் வெளியாகிவிட்ட அவர்களை ஸ்துதி செய்யும் வரையில் அவர்கள் எவ்வித குறையும் கூறுவதில்லை. அவர்கள் மீதும், அவர்களது ஸ்தாபனங்கள் மீதும், அவர்களது நடவடிக்கைகள் மீதும்,

66

ன. 587.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/298&oldid=1584553" இலிருந்து மீள்விக்கப்பட்டது