உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

274

மறைமலையம் 17

சுயநலத்திற்காக அவர்கள் மத வுணர்ச்சியை உபயோகிக்கும் முறையைப் பற்றியும் குறை கூறும் கணமே கண்டனக் கூட்டங்கள் நடைபெறும்; மிக்க புலமை வாய்ந்த சின்டிகேட் மெம்பர்களும் அவர்கள் சார்பில் மார்பு தட்டிக்கொண்டு சலுகைபேச முன் வருகின்றனர்; சர்வகலாசாலையையும் மிரட்டுகின்றனர்; ஏற்கனவே பாடப் புத்தகங்களாக விருந்த பலவற்றில் பிராமணரல்லாதார் பலமாக ஆட்சேபிக்கத்தக்க கணக்கற்ற விஷயங்களைக் காணலாம். “ஹிந்து” பத்திரிகை வாலிப ஆடவர், பெண்களின் ஒழுக்கத்திற்காக பரிந்து பேசுகிறது. எதிர்வாதத்தைக் கூறும் எத்தனம் கண்டு குரோதமும், பொறாமையும் கொள்வதால் ஒழுக்கம் சிறந்து விடாது. இந்த விஷயங்களைப்பற்றி அபிப்பிராயங்களைத் தெரிவிக்க ஓர் அளவு சுதந்தரமும் குறைகளைச் சகித் திருப்பதுமே நல்லொழுக்கத்திற்கு அஸ்திவாரங்களாகும்.

அநேக பாடசாலைகளிலும் சில கல்லூரிகளிலும் உபாத்தியாயர்கள் பிராமணரல்லா சிறுவர்களை இழிவுக்கு ஆளாக்கி வருகின்றனரென்றும், கட்சிகளையும் அரசியலையும், குறைகூறுவதில் போதனைக் காலத்தை வீணாக்கி வருகின்றன ரென்றும் நமக்கு அடிக்கடி புகார்கள் வந்தவண்ணமா யிருக்கின்றன. அத்தகைய நடவடிக்கைகளை இதுவரையில் எதிர்க்காமலிருப்பதானது பிராமணரல்லாதாரின் சகிப்புத் தன்மையைக் காட்டுகிறது. நமது தேசமக்களில் ஒரு சிறு கோஷ்டியினர் குறுகிய மனப்பான்மையுடன் அனாவசியமாக தகராறுகளை ஏற்படுத்துவார்களேயானால் இம்மாகாணத்தில் சமூகத் துவேஷம் பலத்து வேரூன்றிவிடும் “ஹிந்து” பத்திரிகைக் கும், அப்பத்திரிகையை ஆதரிக்கும் கோஷ்டியினருக்கும் விவேகம் ஏற்படுமென்றும், துரதிருஷ்டவசமாக “ஹிந்து” ஆதரித்துள்ள இவ்வித துவேஷகரமான கிளர்ச்சி இனிமேல் ஏற்படாதென்றும் நம்புவோமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/299&oldid=1584554" இலிருந்து மீள்விக்கப்பட்டது