உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

ஒரு ஆச்சாரியாரின் ஓலம் மறைமலை நூலில் மயக்கம்

""

(ஊழியனில் “வசு’ எழுதுவதாவது)

"மறைமலையடிகள்” என்று தமிழ்நாடு வழங்கும், சுவாமி வேதாசலம் அவர்களை அறியாதாரிருக்க முடியாது. அவர் ஒரு பெரிய கல்விக்களஞ்சியம். ஓர் உண்மைத் தமிழன். தமிழ்த்தாய்த் திருவடி பேணித்தினமும் வணங்கும் திரட்குணம் உடையவர். தமிழ் தழைக்க உலகம் தழைக்கும் என்றுகூட நினைப்பவர்.

இப்படிப்பட்ட மறைமலையடிகள் ஒருவாறு நவ நாகரிகக் கொள்கைகள், மல்கிய தமிழ் வியாசங்கள் சிலவற்றை எழுதித்தொகுத்து, “ அறிவுரைக்கொத்து” என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறார். அதில் காணும் வியாசங்கள் பல அவ்வப்போது பல உருவங்களில் வெளிவந்தனவாகும்.

அந்த அறிவுரைக்கொத்தை சென்னை யூனிவர்சிட்டியார் கண்பார்த்து இண்டர்மீடியட் வகுப்பிற்கு தமிழ் பாடமாக வைத்துள்ளார்கள். அது பிடிக்கவில்லை சில பேர்வழிகட்கு.

இந்த வாரம் சனிக்கிழமையன்று டி.கே. ஜெகந்நாதாச் சாரியார் என்ற ஒருவர் ஹிந்துவில் முக்கால் முழநீளத்தில் ஒரு லெட்டர் எழுதியிருக்கிறார். அதில் அறிவுரைக்கொத்து இண்டர்மீடியட் வகுப்பிற்கு வைக்கப்பட்டது பெரிய தவறென்றும், அவசியம் யூனிவர்சிட்டியார் ரத்து செய்துவிட்டு வேறொன்றைப் போட்டு நிரப்பவேண்டுமென்றும் உபதேசிக்கிறார்.

அந்த திருமுகத்தைப் படித்துப்பார்த்தால், அய்யங்கார் இந்த உலகிற்கே ஒரு புதிய பிராணி என்று தோன்றா நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/300&oldid=1584555" இலிருந்து மீள்விக்கப்பட்டது