உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் -17

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் என்னென்ன சமாச் சாரங்கள் நடைபெறுகின்றன, என்னென்ன போராட்டங்கள் நிகழ்கின்றனவென்பது அவருக்குத் தெரியாது போலிருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவரின் கடிதத்தைப் பெரிதாக நினையாமல் விட்டுவிட்டிருக்கலாம். ஆனால் இந்து பத்திரிகை அதற்கு காடுத்திருப்பதை நினைக்கையில் நாம் அதற்கு ஒன்றிரண்டு சமாதானமாவது சொல்லித்தான் ஆகவேண்டு மென்று தோன்றுகிறது.

டங்

மீது

தோழர் அய்யங்கார் அறிவுரைக்கொத்தின் கொண்டுவரும் அப்புத்தகத்தில்,

குற்றச்சாட்டுகள் விநோதமானவை.

(1) பிராமணர் பிராமணரல்லாதார் பிரச்சினை,

(2) தமிழ் மொழி-வடமொழி தகராறு,

(3) முதலாளி-தொழிலாளி போராட்டம்,

(4) சீர்திருத்தக்காரர்-பழமைவிரும்பிகள் பூசல், ஆகியவை பற்றி எழுதப்பட்டிருக்கின்றதாம்.

அப்பால் ஸ்ரீமத் ராமாயணமும், வேறு சில ஹிந்து மதநூற்களும் பொய்யானவை என் என்று சொல்லப்பட்டிருக் கிறதாம்.

என்று

அப்படிச் சொல்வதால் ஹிந்துக்களின் புண்படுத்தப்பட்டுவிடுமாம்.

உணர்ச்சி

பிறகு உத்யோகம் நாடும் ஆங்கிலம் படித்தவர்கள் கெட்டுப்போவதோடு, மானக்கேடான பல காரியங்கட்கும் சொல்லப்பட்

ஆளாகின்றார்கள் என்று புத்தகத்தில்

டிருக்கிறதாம்.

மற்றொரு சார்ஜ், பார்ப்பனரல்லாதாரை நம்மவர் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றாராம்.

இப்படிப் பலப்பல சொல்லிவிட்டு சென்னை சர்வகலா சாலையார் தூற்றப்படுவதினின்றும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றும், எல்லாப்பெற்றோர்களும் சர்வ கலா சாலையாரிடம் மேற்படி புத்தகத்தைப்பற்றிக் கேள்வி கேட்கவேண்டு மென்றும் கேட்டுக்கொள்ளுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/301&oldid=1584556" இலிருந்து மீள்விக்கப்பட்டது