உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை

  • மறுப்புக்கு மறுப்பு

277

சர்வ கலாச் சாலையின் L மானத்தைக் காப்பாற்றுவதில் தோழர் ஆச்சாரியார் கொண்டிருக்கும் கவலையைப் போற்றவேண்டுவதுதான்; ஆனால் சர்வகலாச் சாலையார் என்னென்ன பாடங்களைப் போதிக்க வேண்டு மென்று அய்யங்கார் “சாமிகள்” தெரியாமலிருப்பதுதான் வருந்தத்தகுந்தது.

பிராமணர்-அல்லாதார் பிரச்சினை

பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினைப்பற்றி மாணவர் தெரிந்திருக்க வேண்டுவது, சூரியன் கீழ்த்திசையில் தோன்றி மேல்திசையில் அடைகிறா னென்பதைப் படிக்க வேண்டுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமாகும். வேதம், ஆகமம், புராணம் முதலிய எல்லா இந்து சாஸ்திரங் களும் தங்கட்குச் சொல்கின்ற எல்லா பிராமண தர்மங்களையும் விட்டு விட்டு வெள்ளைக்காரப் பெண்களைக் கட்டி, போலீஸ் உத்யோகம் வகித்து, சிகரட் சாராயங்களை அருந்தி, “மிலேச்ச” பாஷையைப் பயின்று, வெள்ளைக்காரனோடு சமமாக இருந்து, மீன் வியாபாரம், தோல் வியாபாரம், அரிசி வியாபாரம் முதலியன செய்து, இன்ன ஜாதி இன்னவூர் என்று சொல்ல முடியாதபடி வேஷத்தைப் போட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஜாதியார், மற்றவர்களையெல்லாம் சூத்திரர் என்று ஓயாது சொல்லி, பலவழியிலும் அழுத்திக்கொண்டிருக்கும் அதர்மம் பல நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கு மானால்,அதனைப்பற்றி கல்லூரி மாணவர் தெரிந்துகொள்ளாது வேறு எதைப் பற்றித்தான் தெரியவேண்டும்? தென்னாட்டு அரசியல், சமூக பொருளாதார, மத உலகில் இமாலயம் போன்று நிதம்நிதம் பல உருவங்களில் எழுந்து தோன்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைக்கல்லாய் நிற்பது இந்த பிரச்சினையன்றோ! கல்லூரி மாணவர்கள் பிரிட்டனி லுள்ள விக்டோரி கட்சிகளையும், லேபரேர்ஸ், காபிடலிஸ்ட் (முதலாளி-தொழிலாளி) கட்சிகளையும் லிபரல்ஸ், கண்சர் வேடிவ் (தாராள நோக்கமுடையோர்; குறுகிய நோக்க முடையோர்) கட்சிகளையும் பற்றி படித்தால் போதும்; ஆனால் தம் நாட்டிலுள்ள கட்சியாரைப்பற்றி மட்டிலும் தெரிய வேண்டாமென்கின்றாரா தோழர் அய்யங்கார்? ஒரு கால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/302&oldid=1584557" இலிருந்து மீள்விக்கப்பட்டது