உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் 17

தெரிவதால் தம் ஜாதியாரின் குட்டு வெளியாகிவிடும் என்று பயப்படுகிறாரோ என்னமோ? அப்படியானால் அய்யங்கார், பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டை இல்லாமல் போகு மாறு சமூகத்தைத் திருத்தம் செய்துவிட முயன்று விடுவதுதான் தகுதி! மறைமலையடிகள் புத்தகத்தை நீக்கிவிடுவதன்மூலம் மேற்படி பிரச்சினை மாய்ந்து விடுமென்று நினைப்பவரானால் அய்யங்கார் மூளைக்கு பரிசுதான் கொடுக்கவேண்டும்.

தமிழ்-வடமொழித் தகராறு

66

அப்பால் தமிழ் வடமொழி தகராறைப்பற்றி தோழர் அய்யங்கார் பேசுகிறார். இது ஒரு பழையபாடம். தமிழர்க் கெல்லாம் பல தலைமுறைகளாகத் தெரிந்தது. டாக்டர் சாமிநாத அய்யர் போன்ற சிலர் தலைகீழ் குட்டிக்கரணம் போட்டு (மறைமுகமாக) தமிழ்மொழியெல்லாம் வடமொழி என்று காட்டிவிட முயலும் வேலை யொருபால் நிகழ, அதே போழ்து தங்களை ஆரியரென்றும் ஆனால் தாய்மொழி தமிழென்றும் சொல்லிக்கொள்ளும் அநியாயம் மற்றொரு பாலிருக்க, அஃதுடன் "கடவுளிடம் ரகசியம் பேசும் போதெல்லாம் வடமொழியிலேயே பேசிக்கொள்ளும் படுமோசம் இன் இன்னொருபால் நடைபெற, 'துளசிபத்ரம் சமர்ப்யாமி' என்பதை ஏனையா துளசி இலை போடப் படுகிறது” என்று சொல்லக்கூடாது என்றால், கோபப்பட்டு விடும் ஹம்பக் பிரிதொருபால் நிகழ, நாடு குழப்பமடையும் போது மேற்படி பாஷைத் தகராறைப்பற்றி கூறாமலிருக்க முடியுமா? மேலும், நெருங்கிய சம்பந்தமுடைய இருமொழி களின் ஆக்கம், சம்பந்தம் ஆகியவைகளைப் பற்றி பாஷை கற்பிக்கும் ஒரு நூலில் சொல்லாது வேறெங்கு கொண்டு சொல்வது! தருக்கம், பௌதிகம் முதலிய பாடங்களிலா வடமொழி தமிழ் தகராறுகளைக் கொண்டு நுழைப்பது? தோழர் அய்யங்கார், இப்படி, பாஷைகளைப்பற்றிய, சங்கதிகளே சர்வ கலாசாலை மாணவர்கட்குத் தெரியாமல் போய்விட வேண்டுமென்று நினைப்பாரானால் நிரம்ப நிரம்ப விசேஷந் தான்.

அய்யங்காரே! தகராறான விஷயங்களைப்பற்றிய பிரச்சினைகளைக் கிளப்பும்போதுதானே மாணவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/303&oldid=1584558" இலிருந்து மீள்விக்கப்பட்டது