உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

279

யோசிக்கும் சக்தி வளரும்; அறிவு மிகும்; அதுபற்றித்தானே கலாச் சாலைகளில் ஆராய்ச்சிக் கூட்டங்கள் (debating societies) நடத்தப்படுகின்றன? வாதம் ஏற்படாத விடத்தில் அறிவு வளர்வதெங்கே? படிப்பு வளர்வதெங்கே? இந்த சங்கதி தெரியாது. விவாதத்திற்குரிய சங்கதிகள் அறிவுரைக்கொத்தில் விளக்கப்பட்டிருக்கின்றதென்றால் அதன் பொருளென்ன? நீர் கூறியவாறு கல்லூரி temple of peace (சமாதானக் கோவிலாக) விருப்பதனால் ஒரு விளக்கெண்ணெய் ஸ்தாபனமாகவன்றோ இருக்கும்? தமிழர் ஆலயங்களில் மத விசாரணை, சித்தாந்த கோஷங்கள், தத்துவ ஆராய்ச்சி ஆகியவை நடைபெறுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீரா? ஆலயத்தில் அப்படிப்பட்ட ஆராய்ச்சியின்றி விளக்கெண்ணெய்மயமாக விருந்தால் மத அறிவு பரவுவதெப்படி? சுருங்கச்சொன்னால் சமாதானக் கோவிலில்தான் ஆராய்ச்சிக்குரிய பிரச்சினைகள் வளர வேண்டும்.

"அன்றி ஒருவன் சொன்னதை மற்றொருவன் கேட்டு விட்டு மண்போல் போகும் படிப்பு இருக்குமானால், அப்படிப்பட்ட படிப்பை யொழித்துவிட்டு மாடுஅடைக்கும் தொழுவமாக்கி விடுவதில் என்ன தடை ?”

இராமாயணம் உண்மையா?

6

பிறகு தோழர் அய்யங்கார் ராமாயணம் முதலிய இந்து மத நூல்கள் பொய்யானவை என்று கண்டிக்கப்படுவதாகக் கூறுகிறார். ராமாயணம் மெய்யென்று நினைத்துக் கொண் டிருந்த அய்யங்கார் அறியாமைக்கு இரங்குகிறேன். இந்து மத இதிகாச புராணங்கள் குப்பை கிடங்குகட்குக்கூட லாயக் கில்லாதவை என்பது பழைய காலம் முதல் உறுதிபெற்ற பாடம். அதற்காக எவரும் இப்போது கண்ணீர் வடிப்பார் இல்லை. எந்த இந்துவும் ராமாயணத்தைக் குறை சொன்னதற்காகக் கோபப்பட்டு விடவோ ஆத்திரப்பட்டு விடவோ மாட்டான். உதாரணமாக நான் ஓர் இந்து; என்னிடம் ராமாயணத்தைக் குறை சொன்னால் எனக்கு கோபமே வருவதில்லை. தசரதர் 6000 மனைவிகள் வைத்திருந்ததையும், பாயாசம் பிள்ளை பெற்றதையும், ராவணன் 10 தலை தாங்கி இருந்ததையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/304&oldid=1584559" இலிருந்து மீள்விக்கப்பட்டது