உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் 17

மேகங்களில் ராக்ஷதர்கள் புகுந்து யுத்தம் செய்ததையும், சீதை மண்ணில் பிறந்ததையும், ஹனுமான் 150-யோசனை தாவிச் சென்றதையும் இதுபோன்ற கோடி கோடி ஆபாசங்களையும் நம்பும் தோழர் அய்யங்காருக்கு என்னமெடல் கொடுப்ப தென்று தெரியவில்லை.

முதலாளி தொழிலாளித் தகராறு

இதன்பின் முதலாளி தொழிலாளித் தகராறைக் கிளப்பு கிறதென்று கலங்குகிறார். இன்று உலகில் என்ன போராட்டம் நடைபெறுகிறதென்பதைத் தெரியாத அய்யங்காருக்கு மாணவர்கட்கு என்ன பாடம் படிப்பிக்க வேண்டுமென்பது தெரியுமா?

ஆங்கிலம் கற்றோர் கதி

ம்

ஆங்கிலம் கற்று வேலைக்காகத் திரிபவர் மானக்கேடான காரியங்கட்கும் துணிவார்கள் என்று அடிகள் சொன்னதில் அய்யங்காருக்கு நிரம்ப வருத்தம். நானும் வருத்தந்தான் கொள்கிறேன். அடிகள் மானக்கேடான காரியங்கள் சிலவற்றை புள்ளி விவரத்துடன் எடுத்துக்கூறாமல் விட்டுவிட்டார் களல்லவா? அது கண்டிக்கத் தகுந்ததுதான் எல்.எம். ஆர் என்ற பெயர்போன எழுத்துக்களை எடுத்து சில பக்கங்கள் விளக்கியிருக்க வேண்டியதும்; அதோடு சிலர் உத்தியோகம் பெற்ற கதைகளை வரிசையாக விளக்கியிருக்க வேண்டியதும் முறை! தவறிவிட்டார் அடிகள்.

அறிவுரைக் கொத்தில் ஆசிரியர் தமிழர்களை நம்மவர் என்று கூறுவது மற்றொரு குற்றமாம். ஆசிரியர் ஒரு தமிழர் ஆகையால் தமிழரை நம்மவரென்று அழைத்ததில் என்ன ஆச்சரியம்? அய்யங்கார் தன்னை தேவ ஜாதி என்று நினைத்துக் கொண்டிருப்பதால் 'நம்மவ'ராக முடியவில்லை. இதற்கு ஏதாவது சுவரில் முட்டிக்கொள்வரைத் தவிர அடிகள் புத்தகத்தில் முட்டிக்கொள்வதில் பயனென்ன? ஒருகால் பிராமணரல்லாதார் உணர்ச்சியோடுதான் அறிவுரைக்கொத்து

எழுதப்பட்டிருக்கின்றதென்று வைத்துக்கொண்டாலும் அந்த பிராமணரல்லாதார் பணத்தையும் உழைப்பையுமுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/305&oldid=1584561" இலிருந்து மீள்விக்கப்பட்டது